மதுரை, நவ. 20-
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி 3வது வார்டு பசும்பொன் நகர் பகுதியில் குடியிருப்பவர் கண்ணாயிரம் பிள்ளை இவர் ஓய்வு பெற்ற சர்வேயர் இவரது மனைவி மகேஸ்வரி ஓய்வு பெற்ற ஆசிரியை இவரது மகன் ராம்குமார் தவெக வின் நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று மதியம் மூன்று மணி அளவில் பசும்பொன் நகரில் உள்ள இவரது வீட்டின் மாடியில் மின் கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இவரது தந்தை படுத்து ஓய்வு எடுப்பது வழக்கம். மாடியில் இருந்து கீழே இறங்கி வந்ததால் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.
தீ மளமளவன எரிந்த நிலையில் கீழே இருந்த கண்ணாயிரம் மேலே சென்று பார்த்த போது அவர் ஓய்வெடுக்கும் அறையில் தீ மள மள என பற்றி எரிந்துள்ளது. மேலும் அறை முழுக்க தீ பரவிய நிலையில் இவரது முகத்தில் தீ பற்றி முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக பசும்பொன் நகர் மெயின் ரோட்டில் வணிக நிறுவனம் நடத்தி வரும் தனது மகன் ராம் குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
ராம்குமார் அந்த பகுதியில் தமிழக வெற்றி கழக நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார் உடனடியாக வீட்டிற்கு வந்த ராம்குமார் வீட்டின் மாடி பகுதி தீப்பிடித்து எரிந்தது கண்டு உடனடியாக சோழவந்தான் தீயணை
ப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு வந்த சோழவந்தான் தீயணைப்பு துறையினர் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒன்றரை மணி நேரம் போராடி தீயை அணைத்ததாக கூறப்படுகிறது பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பீரோ மற்றும் அருகில் இருந்த செல்ப் அனைத்தும் எரிந்து கரும் புகையாக காணப்பட்டது. பீரோவில் 2 லட்ச ரூபாய் இருந்ததாகவும் மேலும் டிவி பிரிட்ஜ் போன்ற மின் சாதனங்களும் எரிந்து கருகி கடந்த நிலையில் அவைகளின் மதிப்பும் சுமார் ஒரு லட்சம் வரை இருக்கும் என்றும் கூறப்படுகிறது. சுமார் மூன்று லட்சம் மதிப்புள்ள பொருட்களும் மேலும் சேதமடைந்த பகுதியை சீரமைப்பதற்கு இரண்டு லட்சமும் தேவைப்படும் என்றும் அவர் வேதனை
யுடன் கூறினார்.
சோழவந்தானில் மின் கசிவு காரணமாகசர்வேயர் வீட்டில் திடீர் தீ விபத்து
