‘வரியை குறைத்தோம்: விமான சேவையை விரிவுபடுத்த வேண்டும்விமான நிறுவனங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்
சென்னை, அக். 28-சென்னை விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளை அதிகரிக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.இதன் ஒரு பகுதியாக, விமான எரிபொருளான ஏவியேஷன் டர்பைன் ஃபியூல் மீதான மதிப்பு கூட்டு வரியை 29 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாக தமிழக அரசு குறைத்துள்ளது. இதையடுத்து, சென்னையில் இருந்து கூடுதல் விமானங்களை இயக்கவும், புதிய இடங்களுக்கு விமான சேவைகளை விரிவுபடுத்தவும் விமான நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், கூடுதல்…
