தென்னகத்தின் முதல் விஸ்டாடம் கோச் தினசரி சேவை மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு

மதுரை, நவ. 20-மதுரை – குருவாயூர் எக்ஸ்பிரஸில் விஸ்டாடம் கோச் சேவை நீட்டிப்பு; 2027 பிப்ரவரி 15 வரை தொடரும் என கேரளா மாவேலிக்கரை நாடாளுமன்ற உறுப்பினர் கொடிக்குன்னில் சுரேஷ் தெரிவித்தார்மதுரை – குருவாயூர் எக்ஸ்பிரஸில் விஸ்டாடம் கோச் – புதிய உத்தரவின்படி, 2027 ஜனவரி 16 முதல் பிப்ரவரி 15 வரை சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.‘எனது நிலையான தலையீடுகள் மற்றும் கோரிக்கைகளின் விளைவாக முன்னர் இந்த ரயிலில் விஸ்டாடோம் பெட்டிகள் நிஜமாகிவிட்டது. இந்த வழித்தடத்தின் இயற்கைக் காட்சிகள்…

Read More

“விரிவான வாதங்கள் வேண்டாம்; இடைக்கால உத்தரவுக்கான வாதங்கள் போதும்” – வழக்கை இன்று ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்

திருப்பரங்குன்றம், நவ.20-கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.நூற்றாண்டு கால நடைமுறையை மாற்றக் கூடாது என அரசு தரப்பு வாதிட்ட நிலையில் விசாரணை இன்றும் நடைபெற்று வருகிறது.கடந்தாண்டு டிசம்பர் மாதம் ராமரவிக்குமார் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்திற்கு பதிலாக பழமையான தீபத் தூணில்தான் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார்.இந்த உத்தரவை…

Read More

அமைச்சர் ராஜ்மோகன் கட்டியிருந்த வாட்ச்விலை ரூ.45 லட்சமா? அவரே கொடுத்த விளக்கம்

சென்னை, நவ. 20-தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், தான் அணிந்திருந்த கைக்கடிகாரத்தின் விலை குறித்துச் சமூக வலைதளங்களில் பரவி வரும் சர்ச்சைக்கு திட்டவட்டமாக விளக்கமளித்துள்ளார்.தமிழக அமைச்சர்கள் என்.ஆனந்த் (புஸ்ஸி ஆனந்த்), ஆதவ் அர்ஜுனா மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோர் அரசு முறைப் பயணமாக டெல்லி சென்றுள்ளனர். அங்கு மத்தியக் கல்வித்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷியைச் சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன், தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய சுமார் ரூ.5,000 கோடி ‘சமக்ர சிக்‌ஷா’ நிலுவை நிதியை உடனடியாக…

Read More

திடீர் மோதல்: செய்தியாளர்கள் சந்திப்பை பாதியிலேயே முடித்துவிட்டு கிளம்பிய ராஜேந்திர பாலாஜி

சென்னை, நவ. 20-இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 90ஆம் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள வ.உ.சிதம்பரனாரின் திருவுருவச் சிலைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வ.உ.சிதம்பரனாரின் சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.அதன் பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரே சமூகத்தைச் சேர்ந்த…

Read More

நீதிமன்றத்தில் சந்திப்போம்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு திமுக பரந்தாமன் சவால்

சென்னை, நவ. 20-பரபரப்பான தமிழக அரசியல் சூழலில், தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், அக்கட்சியின் சட்டத்துறை இணைச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பரந்தாமன் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து வருகிறார்.அப்போது அவர் த.வெ.க. அரசின் செயல்பாட்டைக் கடுமையாக விமர்சித்துப் பேட்டியளித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு எதிராக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வக்கீல் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.அதில், ‘கடந்த 09.11.2026 அன்று சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், நேரலையாக ஒளிபரப்பப்பட்ட நிகழ்வில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராகத்…

Read More

அன்பில் மகேஷ், கே.என்.நேருவை தொடர்ந்து துரைமுருகன்:அடுத்தடுத்து சிக்கும் முக்கிய தலைகள் – நெருக்கடியில் திமுக

சென்னை, நவ. 20-தவெக ஆட்சி அமைந்தது முதலே கடந்த கால திமுக ஆட்சியில் அமைச்சர்களாக பொறுப்பு வகித்தவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை கையில் எடுத்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.அன்பில் மகேஷ் சிறையில் உள்ள நிலையில், கே.என். நேரு மீதான ஊழல் வழக்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது துரைமுருகன் மீதான ஊழல் வழக்கு தீவிரம் அடைந்துள்ளது. கடந்த திமுக ஆட்சியில் இவர் நீர்வளத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தபோது சட்டத்திற்கு புறம்பாக மணல் அள்ளியதில் தமிழ்நாடு அரசுக்கு வருவாய்…

Read More

கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு காலமானார்

சென்னை, நவ. 20-சென்னை மருத்துவமனையில் 70 நாட்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சை பெற்றுவந்த கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி.எஸ்.பாபு காலமானார். அவருக்கு வயது 75. இன்று பிற்பகல் 2.24 மணிக்கு உயிர் பிரிந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.சென்னை கொளத்​தூர் தொகு​தி​யில் திமுக தலை​வரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்​டா​லினை எதிர்த்து போட்​டி​யிட்டு வெற்றி பெற்​றதன் மூலம் தமிழகம் முழுவதும் வி.எஸ்​.​பாபு பிரபலம் அடைந்​தார். ஒரு மாத​மாக நடந்து வந்த சட்​டப்​பேரவை கூட்​டத்​தொடரில் பங்​கேற்ற அவருக்​கு, கடந்த செப்டம்பர் மாதம் 9-ம்…

Read More

மகளிர் உரிமைத் தொகை திட்டப் பயனாளிகள் நீக்கமா?- தமிழக அரசு திடீர் விளக்கம்

சென்னை, நவ. 20-மகளிர் உரிமைத் தொகை இரண்டாம் கட்டப் பயனாளிகள் நீக்கம் தொடர்பாக நாளிதழ்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.இது தொடர்பாக சமூகப் பாதுகாப்புத் திட்டம் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘மகளிர் உரிமைத் தொகையின் இரண்டாம் கட்டத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்ட பயனாளிகளில் சுமார் 50 சதவீதம் பேர் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டது தொடர்பாக நாளிதழ்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியான செய்திகள் முற்றிலும் தவறானது மற்றும் உண்மைக்குப் புறம்பானது ஆகும்.மகளிர்…

Read More

மேகதாது திட்டத்துக்கு எதிராகதிருச்சி காவிரி ஆற்றில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருச்சி, நவ. 20-காவிரி ஆற்று மண்ணில் புதைந்து இன்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கர்நாடக மாநிலம் மேகேதாட்டில் அம்மாநில அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய நதிநீர் பங்கீடு கிடைக்க பெறாமல் போகும் என்பதால் விவசாயம் பாதிக்கப்படும் என்று கூறியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் இன்று காலை 7 மணி முதல் திருச்சி ஓடத்துறை படித்துறையில்…

Read More

பெண் ஐ.பி.எஸ். அதிகாரியை இரவில் தொடர்புகொண்ட அமைச்சர் விஜயபாலாஜி?ஈரோடு ஆட்சியர் தலையிட்டதாக வெளியான தகவலால் பரபரப்பு

ஈரோடு, நவ. 20-ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதியை, கைத்தறித்துறை அமைச்சர் விஜயபாலாஜி இரவு நேரத்தில் தொலைபேசியில் தொடர்புகொண்டு விசாரணை தொடர்பாகக் கேள்வி எழுப்பியதாக வெளியாகியுள்ள தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதையடுத்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அமைச்சரிடம் பேசியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.ஈரோடு மாவட்டத்தில் கறிக்கோழி விற்பனை மற்றும் லாட்டரி விற்பனை தொடர்பாகப் புகார்கள் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் புகார்கள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு காவல்துறை தலைமை அலுவலகம், மாவட்ட காவல்…

Read More