“காவிரி டெல்டா விவசாயிகளின் குறைகளை கேட்க தி.மு.க. சார்பில் குழு” – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, நவ. 24-‘மேகதாது அணையைக் கட்டினால் யாரும் கேட்க முடியாது’ என்று துணிச்சலாக கர்நாடக முதலமைச்சர் சவால் விடுகிறார். அவருக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேச மறுக்கிறார் தமிழ்நாட்டு முதலமைச்சர் என விமர்சித்துள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், “இது குறித்தும் டெல்டா மாவட்ட உழவர்கள், பொதுமக்கள் கருத்தை அறியவும், அவர்களது கோரிக்கைகளை கேட்கவும் திமுக சார்பில் ஒரு குழு அமைக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-“த.வெ.க. ஆட்சிக்கு வந்ததில்…
