திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா:நாளை நடைபெறும் மகா தேரோட்டம்பஞ்ச ரதங்களுக்கும் கலசம் பொருத்தும் பணி நிறைவு
திருவண்ணாமலை,நவ. 20-திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்று வரும் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தேரோட்டம் நாளை (21/ந்தேதி) நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, மாட வீதிகளில் வலம் வரவுள்ள ஐந்து தேர்களுக்கும் கலசம் பொருத்தும் பணிகள் இன்று நிறைவடைந்தன.பஞ்ச பூதத் தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் போற்றப்படும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, கோயிலில் தினமும் பல்வேறு…
