தமிழக அரசு அதிகமாக கடன் வாங்குவது பற்றி பேரவையில் விவாதிக்க வேண்டும்மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி
திருச்சி, அக். 28-திருச்சியில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டி: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இவ்வளவு தான் இருக்க வேண்டும் என கூறும் நிலை தற்போது இல்லை, தானாக அது தன்னுடைய இயற்கை நிலையை அடையும். தற்போது ரிசர்வ் வங்கி அதை திடீரென மாறும் சூழல் ஏற்படாத வகையில் நடவடிக்கை முயற்சி எடுத்து வருகிறது. ஆனால் ரிசர்வ் வங்கியே இங்கே ரூபாயின் மதிப்பு எவ்வளவு தான் இருக்க வேண்டும் என எந்த முடிவும்…
