சென்னை, அக். 23-
கடந்த சில வாரங்களாக மாநிலம் முழுவதும் அரிசி விலை ஏற்றத்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.எனவே பொதுமக்கள் நலன் கருதியும், வெளிச்சந்தையில் அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் கூட்டுறவு மற்றும் அமுதம் அங்காடிகள், ரேஷன் கடைகள் சன்ன ரக அரிசி (பொன்னி அரிசி) விற்பனை செய்யும் திட்டம் சமீபத்தில் தொடங்க
ப்பட்டது.
இந்த திட்டம் மூலம் 1 கிலோ அரிசி ரூ.30-க்கு விற்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 184 விற்பனை நிலையங்களுக்கு 439 டன் சன்ன ரக அரிசி அனுப்பி வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 30 ரூபாய் சன்னரக அரிசி இதுவரை 16 டன் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு
ள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.
184 விற்பனை நிலையங்களுக்கு 439 டன் சன்னரக அரிசி அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இதுவரை 16 டன் மட்டுமே விற்பனை செய்யப்ப
ட்டுள்ள தகவல், அரிசி விற்பனை மந்தமாக இருப்பதை வெளிப்படுத்தி உள்ளது. இதற்கு காரணம் இத்திட்டம் தொடங்கி சில நாட்களே ஆவதால், ரேஷன் கார்டுதாரர்கள் மற்றும் சாமானிய மக்கள் பலருக்கு கூட்டுறவு மற்றும் அமுதம் அங்காடிகளில் இந்த அரிசி கிடைப்பது குறித்த முழுமையான தகவல் இன்னும் சென்றடையவில்லை.
அதே நேரம் சேலம் போன்ற ஒருசில மாவட்டங்களில், கூட்டுறவு அங்காடிகளில் ரூ.30-க்கு வழங்கப்படும் சன்ன ரக அரிசி, வழக்கமான ரேஷன் அரிசியைப் போன்ற தரத்திலேயே இருப்பதாகக் கூறி பொதுமக்கள் சிலர் அரிசியைத் திருப்பித் தந்து பணத்தைப் பெற்றுச் சென்ற சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. எனவே போதிய விழிப்புணர்வு இல்லாதது ஒருபக்கம் இருக்க, அரிசியின் தரம் சுமாராக இருப்பதும் விற்பனை குறைவாக இருக்க முக்கிய காரணமாக கருதப்டுகிறது. இதனிடையே கூட்டுறவு பண்டக சாலை பணியாளர்கள் சிலர் பேசும் போது ரேஷன் கடைகளில் வழக்கமாக வழங்கப்படும் அரிசியை தான், மலிவு விலை சன்னரக அரிசி என கிலோ ரூ.30-க்கு விற்க அதிகாரிகள் அனுப்பியுள்ள
னரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அரிசியை பார்க்கும் பலரும் இது வழக்கமான ரேஷன் அரிசியா எனக் கேட்டு வாங்காமல் செல்கின்றனர் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரூ.30க்கு தரமில்லாத சன்ன ரக அரிசியை வாங்க மறுக்கும் பொதுமக்கள்
