சென்னை, நவ. 22-
உலகம் முழுவதும் இன்று மீனவர் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக மீனவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஜோதிடரின் பேச்சைக் கேட்டு மீனவர்களின் வாழ்விடத்தை அழிக்கத் துடிக்கிறது தவெக அரசு என்று விமர்சித்திருக்கிறார்.
இது குறித்து அவர் தனது x பக்கத்தில், “மீனவச் சொந்தங்கள் அனைவ
ருக்கும் கடலளவு அன்போடு உலக மீனவர்கள் தின வாழ்த்து
கள். தமிழர் வரலாற்றிலும் பண்பாட்டிலும் நெய்தல் நில நாயகர்களான மீனவ மக்களுக்குத் தனிச்சிறப்பான இடம் உண்டு.
அத்தகைய மீனவ மக்களுக்காக திமுக ஆட்சியில் மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை உயர்வு, புதிய மீன்பிடித் துறைமுகங்கள், தூண்டில் வளைவுகள், எரிபொருள் மானியம் என எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தினோம்.
ஆனால், தற்போதைய த.வெ.க. அரசோ ஜோதிடரின் பேச்சைக் கேட்டுக் கொண்டு பட்டினப்பாக்கத்தில்தான் தலைமைச் செயலகம் கட்டுவோம் என மீனவர்களின் பாரம்பரிய வாழ்விடத்தை அழிக்கத் துடிக்கிறது. திரையில் மீனவராக நடித்து ஏமாற்றிய முதலமைச்சருக்கு மீனவர்களின் உண்மையான போராட்டக் குணம் பற்றித் தெரிய
வில்லை.
மீனவர்களின் பாதுகாப்பு, பாரம்பரிய மீன்பிடி உரிமை, மீனவக் குடும்பங்களின் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவற்று
க்காகத் தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுக்கும்! அவர்களின் போராட்ட
த்தில் உடன் நிற்கும்!
அலைகளோடு போராடி, தமது உயிரைப் பணயம் வைத்து உணவ
ளிக்கும் மீனவ மக்களின் துணிவையும் உழைப்பையும் போற்றுவோம்” என பதிவிட்டிருக்கிறார்.
பட்டணபாக்கம் மீனவர்களின் வாழ்விடத்தை அழிக்கத்துடிக்கும் தவெக அரசு – மு.க.ஸ்டாலின்
