கால்நடைகள் சாலையில் திரிந்தால் மதுரை மாநகராட்சி எச்சரிக்கை

மதுரை, நவ.3-
மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சாலைகள், பொது இடங்களில் சுற்றித் திரியும் கால்நடைகளைப் பிடிக்கும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், நேற்று வைகை ஆற்றின் வடகரை மற்றும் தென்கரைப் பகுதிகளில் சுற்றித் திரிந்த 4 மாடுகள் மற்றும் ஒரு கன்றுக்குட்டி பிடிக்கப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களுக்கு ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த ஜூன் 2026 முதல் தற்போது வரை மாநகராட்சிப் பகுதிகளில் சுற்றித் திரிந்த 94 கால்நடைகள் பிடிக்கப்பட்டு, கால்நடைப் பட்டிகளில் அடைக்கப்பட்டுள்ளன. இவற்றின் உரிமையாளர்களுக்கு ரூ.4.14 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கால்நடை உரிமையாளர்கள் தங்களது கால்நடைகளைச் சாலைகளிலும் பொது இடங்களிலும் சுற்றித் திரிய விடாமல், தங்களது சொந்தக் கொட்டகைகளில் முறையாகப் பராமரிக்க வேண்டும். தொடர்ந்து விதிமீறலில் ஈடுபடும் உரிமையாளர்களின் கால்நடைகள் பொது ஏலம் விடப்படும் அல்லது கோசாலைகளுக்கு அனுப்பப்படும் என மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *