திருச்சி, அக். 28-
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், ஸ்ரீரங்கம் கோயில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும், வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி மனுக்கள் அளிக்கப்பட்டன. கூட்டத்துக்கு கலெக்டர் பிரதீப் தயாள் தலைமை வகித்தார்.
விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்டச் செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் அளித்த மனுவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பாதுகாப்பை பலப்படுத்தி, மத்திய பாதுகாப்பு படையினரை நியமிக்க வேண்டும். பிற சமயத்தவர்கள் இந்து கோயில்களுக்கு வருவதை தடை செய்யும் சட்டத்தை கேரளாவைப் போல் தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும் எனக் கோரினர். இதே கோரிக்கையை வலியுறுத்தி கோயில் மேலாளரிடமும் மனு அளிக்கப்பட்டது.
துறையூர் தாலுகா முத்தையாபாளையம் மக்கள் அளித்த மனுவில், 57 பேரில் 30 பேருக்கு மட்டுமே வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 27 குடும்பங்க
ளுக்கும் பட்டா வழங்க வேண்டும் எனக் கோரினர்.
லால்குடியில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளால் பொதுமக்கள், மாண
வர்கள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவதால், அவற்றை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என லட்சிய ஜனநாயகக் கட்சி நிர்வாகிகள் மனு அளித்தனர்.
செங்கல்பட்டில் நடந்த முதல்வர் கோப்பை அறிவுசார் குறைபாடுடை
யோருக்கான எறிபந்து போட்டியில் மூன்றாமிடம் பெற்ற திருச்சி டால்பின், காட்ஸ் லவ் சிறப்புப் பள்ளி மாணவர்கள் கலெக்டரிடம் வாழ்த்து பெற்றனர்.
கூட்டத்தில் டிஆர்ஓ பாலாஜி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் இலக்கியா உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.
ஸ்ரீரங்கம் கோயில் பாதுகாப்பை பலப்படுத்த கோரிக்கை குறைதீர் கூட்டத்தில் மனு
