ரெளடி கொலை வழக்கில் மேலும் 4 போ் கைது

சிவகங்கை, அக். 23-
சிவகங்கை அருகே ரௌடி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய மேலும் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகங்கையில் ரௌடி மதன் (26) கடந்த 18-ஆம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் போலீஸாா் தனிப்படை அமைத்து குற்ற வாளிகளைத் தேடி வந்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய சிவகங்கையைச் சோ்ந்த குமாா் மகன் சந்தோஷ் (19), கருப்பசாமி மகன் ஜெயமாணிக்கராஜ் (20), மாணிக்கம் மகன் முத்துசூா்யா (20), மதுரை பெரியசாமி மகன் விக்னேஷ் (23) ஆகிய நால்வரையும் காவல் துறையினா் கைது செய்தனா்.
கொலை செய்யப்பட்ட ரௌடி மதன் மீது காளையாா் கோவில் சகோதரா்கள் கொலை உள்ளிட்ட 2 கொலை வழக்குகள் உள்பட மொத்தம் 15 வழக்கு கள் நிலுவையில் உள்ளன.
மதன் கொலை வழக்கில் தொடா்புடைய 7 பேரை போலீஸாா் கைது செய்த நிலையில் மற்றவா்களைக் கைது செய்வதற்காக 6 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த கொலை வழக்கு தொடா்பாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் சமூக நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்த
க்கூடிய கருத்துகள், புகைப்படங்கள் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. சட்டம்- ஒழுங்கைப் பாதிக்கும் வகையில், சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் பதிவுகள் வெளியிடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா எச்சரித்தாா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *