மதுரை, அக். 27-
மதுரை மாவட்டம், மேலூர் அருகே நேற்று காணாமல் போன 7 வயது சிறுவன், வீட்டின் அருகே உள்ள ஒரு பாழடைந்த ஓட்டு வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி
யுள்ளது.
மேலூர் அருகே உள்ள தனியமங்கலத்தை சேர்ந்த பெரியகருப்பன் – சத்தியா தம்பதியின் 7 வயது ஆண் குழந்தை முத்துச்செல்வம் நேற்று வீட்டின் அருகே விளையாடிக் கொண்டி
ருந்த போது திடீரென மாயமாகியுள்ளார். நீண்ட நேரமாகியும் சிறுவன் வீடு திரும்பாததால், பதற்றமடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவதிப்பட்டு அப்பகுதி முழுவதும் தீவிரமாகத் தேடினர். சிறுவனைக் கண்டுபிடிக்க முடியாததால், குடும்பத்தினர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
சிறுவனை தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று காலை நடத்திய தொடர் தேடுதல் வேட்டையின் போது, சிறுவனின் வீட்டின் அருகே சிறிது தூரத்திலேயே உள்ள ஒரு பழைய, கைவிடப்பட்ட பாழடைந்த ஓட்டு வீட்டில் அச்சிறுவன் சடலமாகக் மீட்கப்பட்டுள்ளன.
சிறுவனின் உடலை கைப்பற்றிய காவல்துறை
யினர் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைகாக அனுப்பி வைத்தனர்.சிறுவன் எவ்வாறு உயிரிழந்தார்? இது தற்கொலையா, கொலையா அல்லது விளையாடும் போது நேர்ந்த ஏதேனும் விபத்தா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொ
ண்டு வருகின்றனர்.
கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் துணை காவல் துறை கண்காணிப்பாளர்கள் சம்பவ இடத்தில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பாழடைந்த வீட்டில் ஏதேனும் சந்தேகத்திற்கி
டமான தடயங்கள் உள்ளதா என்றும், அப்பகுதியில் உள்ளவர்களிடமும் போலீசார் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பிறகே சிறுவனின் மரணத்திற்கான துல்லியமான காரணம் தெரியவரும் என போலீ
சார் தெரிவித்துள்ளனர்.
மதுரை மேலூர் அருகே மாயமான சிறுவன்: பாழடைந்த வீட்டில் சடலமாக கண்டெடுப்பு
