என்னை எப்படியெல்லாம் பேசினீர்கள்?ஷாம்பு, சோப்பால் ஆற்றில் நுரை வருதுன்னு சொல்லும் அமைச்சருக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் -செல்லூர் ராஜூ

மதுரை, அக். 30-
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் நேற்று அளித்த பேட்டி: மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை விஜய் கொடுத்துள்ளார். விலை உயர்வை தீபாவளி பரிசாக தவெக அரசு கொடுத்துள்ளது. கைதட்ட, சிரிக்க, பாவனை செய்ய, பேசக்கூட பொம்மைகள் வந்துவிட்டன.
முதல்வர் எதற்கும் வாய்திறக்க மாட்டேன் என்கிறார். தவெக அரசு வந்த பிறகு மின் கொள்முதலை அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள். வழிப்பறி, சிறுபிள்ளைகள் கடத்தல் நாள்தோறும் நடக்கிறது. பாட்டி முதல் பாப்பா வரை பாதுகாப்பு இல்லை. அமைச்சர்களுக்கு என்ன பேச வேண்டுமென்றே தெரியவில்லை. சட்டத்துறை அமைச்சர் துறையிலேயே ஊழல், குறைபாடு உள்ளது. தவெக ஆட்சியில் 17 பேர் கிளைச்சிறையை உடைத்துக்கொண்டு செல்கிறார்கள்.
நொய்யல் ஆற்றில் வரும் நுரை மக்கள் குளிக்கும் ஷாம்பு, சோப்பால் வருகிறது என தவெக அமைச்சர் சொல்கிறார். உலக மகா கண்டுபிடிப்புங்க. இவருக்கு பெரிய பரிசான நோபல் பரிசு கொடுக்க வேண்டும். நாங்களும் முன்னாள் அமைச்சராக இருந்துள்ளோம். இதையெல்லாம் பார்க்க வேண்டியுள்ளது. எகிப்துன்னு சொல்வாங்க ஈஜிப்துன்னு சொல்வாங்க. நான் ஈஜிப்துன்னு பேசியதற்கு என்னை வச்சு ஓட்டுனீங்க. சின்ன பசங்கள் எல்லாம் என்னை வச்சு தெர்மாகோல்னு கிண்டல் செய்தாங்க.
தெர்மாகோல் நான் போடல, அதிகாரிகள் சொல்லி போட்டது. நம்மள ஓட்டோ ஒட்டுன்னு ஒட்டுனீங்கள்ல, இப்போ யாராவது ஓட்டுறீங்களாப்பா? இப்படிப்பட்ட அமைச்சர்கள் தான், தம்பி விஜய் அமைச்சரவையில் இருக்கிறார்கள். இந்த தவெக ஆட்சி மீது ஏகப்பட்ட விமர்சனம் வந்து விட்டது. விமர்சனங்களை மறைக்க அவர் கைது, இவர் கைது, இதன் மீது கைதுன்னு போடுறாங்க. அடக்குமுறையை இந்த அரசு ஏவி விடப்பார்க்கிறது.
இப்ப உள்ள நடிகர்கள் எம்ஜிஆரின் கால் தூசுக்கு வரமுடியாது. இப்போதுள்ள முதலமைச்சர் உள்பட எந்த நடிகரும் ஏழைகளின் இன்னல் தீர்க்க ஒன்றும் செய்ததில்லை. தனுஷ் வருகைக்கு விஜய் கட்சிக்காரர்கள்தான் பயப்படுகிறார்கள். தனுஷ், சிவகார்த்திகேயன் யாரும் வரட்டுமே நல்லதுதானே?
பசும்பொன்னுக்கு முதல்வர் விஜய் வருவதாக ஏற்பாடுகள் செய்தார்கள். இப்போது வரவில்லை என்கிறார்கள். பசும்பொன் போனால் கேள்வி கேட்பங்கன்னு கூட விஜய் வராமல் இருக்கலாம் இவ்வாறு கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *