சென்னை, அக். 23-
அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி, “தமிழகத்தில் இரு திராவிட கட்சிகளையும் யாராலும் அழித்து விட முடியாது. தவெக விரைவில் காணாமல் போய்விடும்” எனத் தெரிவித்துள்ளார்.
அமமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சிகளில் இருந்து அதிமுக-வில் இணைந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி இன்று தருமபுரி அதிமுக அலுவலகத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியில், அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி பங்கேற்று உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியா
ளர்களைச் சந்தித்த கே.பி.முனுசாமி கூறியதாவது; “எவ்வித முன் அனுபவமின்றி சினிமா மாயை மூலம் விஜய் ஆட்சிக்கு வந்துள்ளார். அரசியல் கட்சிகளின் தியாகம் அவருக்கு தெரி
யாது. எதிர்க்கட்சிகளை அடக்கி விடலாம் என நினைத்து செயல்படுவ
தற்கான எதிர் பலன் விரைவில் அவருக்கு கிடைக்கும்.
கடந்த திமுக ஆட்சியின்போதும் போதைப்பொருள் கடத்தல் நடந்தது. ரூ.3,000 கோடி மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அன்று திமுக-வின் அயலக அணியைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். இப்போது தவெக ஆட்சியிலும் அது தொடர்கிறது. அவர்கள் ஆட்சிக்கு வந்து 5 மாதத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்திய வழக்கில் தவெக நிர்வாகி கைதாகியுள்ளார். அதைப்பற்றி முதலமைச்சர் விஜய்க்கு கவலை இல்லை.
செஞ்சியில் 7 வயது சிறுமி மாயமாகியுள்ளார். இன்னும் அவரை கண்டுபிடிக்கவில்லை. அதிமுக உறுப்பினர்களின் குடும்பத்தைச் சேர்ந்த இளைய தலைமுறையினர் அதிமுக-வுக்கு வந்து கொண்டே இருக்கிறார்கள். விரைவில் அதிமுக-வில் இளைஞர் பட்டாளம் பெருகிவிடும்.
தவெக அரசு நிர்வாகத் திறனற்ற அரசு. இந்த ஆட்சியில் அனைத்து நிலை அதிகாரிகள், அலுவலர்களும் எந்தப் பணிகளையும் செய்யாமல் மெத்தனமாக உள்ளனர். அதிமுக ஆட்சியில் இருந்தபோது இதே அதிகாரிகள், அலுவலர்களைக் கொண்டு தான் சிறந்த நிர்வாகத்தை அளித்தோம். உபரியாக மின் உற்பத்தி செய்து வெளி மாநிலங்களுக்கு விற்பனையும் செய்தோம். அதிமுக ஆட்சியில் இருந்தபோது அதிகாரத்தை அனுபவித்தவர்கள் இன்று வெளியில் சென்றுவிட்டனர்.
அவர்கள் வந்துதான் அதிமுக-வை பலப்படுத்தத் தேவையில்லை. கரைவேட்டிய கட்டிய லட்சக் கணக்கான தொண்டர்களால் ஆனது அதிமுக இயக்கம். அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதவி எதுவும் கிடைக்காதா என்று பல்வேறு கட்சிகளுக்கு சென்றார். அதிமுக-வுக்கு வர முயன்றார். நாங்கள் ஏற்கவில்லை. இன்று அவர் தமிழகத்தின் நிழல் முதலமைச்சராக வலம் வருகிறார்.
31 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த இயக்கத்தை விமர்சிக்க அவருக்கு என்ன தகுதி இருக்கிறது? ராகுல்காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. அதுபற்றி யாரும் கேள்வி கேட்பதில்லை. ஆனால், பழனிசாமி தலைமையிலான அதிமுக-வை திட்டமிட்டே விமர்சனம் செய்கின்றனர்.
தமிழகத்தில் இரு திராவிட கட்சிகளையும் யாராலும் அழித்து விட முடியாது. தவெக விரைவில் காணாமல் போய்விடும். மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இடைத்தேர்தல் நடந்த தொகுதிகளுக்கு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை அறிவித்தி
ருப்பது உள்நோக்கம் கொண்டது. அடுத்து வரவிருக்கும் இடைத்தேர்தல் தொகுதி வாக்காளர்களை கவரவே இந்த அறிவிப்புகள்.
செங்கோட்டையனுக்கு அடையாளம் தந்தது அதிமுக தான். இன்று அந்த கட்சியையே அவர் விமர்சனம் செய்யலாமா? விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர் பின்னர் அதிகாரிகளின் பேச்சை கேட்டு செயல்படுகிறார். விவசாயிகளின் கஷ்டத்தை அறியாதவர் முதலமைச்சர் விஜய். அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி எளிய குடும்பத்தில் இருந்து வந்தவர். அதிமுக ஆட்சியின்போது 2 முறை விவசாயிகளின் பயிர்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன” இவ்வாறு அவர் கூறினார்.
“இரு திராவிட கட்சிகளை அழிக்க முடியாது; தவெக விரைவில் காணாமல் போய்விடும்” – கே.பி.முனுசாமி
