மதுரை மாசி வீதிகளில் அலை மோதிய மக்கள் கூட்டம்

மதுரை, நவ.3-தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரமே உள்ள நிலையில் புத்தாடைகள், இனிப்புகள் உள்ளிட்டவை வாங்க நேற்று பல ஆயிரம் பேர் திரண்டதால் மாசி வீதிகள் ஸ்தம்பித்தன.தீபாவளி பண்டிகை வரும் 8-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கு ஆயத்தமாக, மதுரையில் மாசி வீதிகள், விளக்குத்தூண், பத்துக்குான், மஞ்சணக்காரத்தெரு, கீழ்வெளி வீதி உள்ளிட்ட பகுதிகளில் தீபாவளி விற்பனை களை கட்டி வருகிறது.புத்தாடைகள், வீட்டு உபயோக பொருட்கள்வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால்,…

Read More

மீனாட்சி அம்மன் கோவில் பசுமடம் மூடப்பட்டுள்ளதால்சுவாமிகளுக்கு பாக்கெட் பாலில் அபிஷேகம்பக்தர்கள் கண்டனம்

மதுரை, நவ.3-மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பசுமடம் பூட்டப்பட்டுள்ளதால் அம்மனுக்கும், சுவாமிக்கும் பாக்கெட் பாலில் அபிஷேகம் நடைபெறுவதாக இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. கட்சியின் மதுரை மாவட்டத் தலைவர் சோலைக்கண்ணன் கூறியதாவது:மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மேற்கு ஆடி வீதியில் 50 ஆண்டுகளாக கோயில் நிர்வாகத்தின் பசுமடம் செயல்பட்டு வந்தது. அங்கு 10-க்கும் மேற்பட்ட பசுக்கள் பராமரிக்கப்பட்டன. மீனாட்சி அம்மனுக்கும், சுந்தரேசுவரப் பெருமானுக்கும் 5 கால பூஜையின் அபிஷேகத்துக்கு பசு மடத்தில் இருந்துதான் பால் அனுப்பப்பட்டது….

Read More

கல்லறை திருநாள்: முன்னோர்களின் கல்லறைகளில் பிரார்த்தனை செய்த கிறிஸ்தவர்கள்

மதுரை, நவ. 3-உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் நவம்பர் 2-ந் தேதி கல்லறை திருநாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் கிறிஸ்தவர்கள் தங்களின் முன்னோர்கள் மற்றும் உறவினர்களின் கல்லறைகளுக்குச் சென்று, அவர்களை நினைவுகூர்ந்து, அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வது வழக்கம். தேவாலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும்.அவ்வகையில் நேற்று கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி கல்லறைத் தோட்டங்களுக்கு சென்ற கிறிஸ்தவர்கள், தங்கள் முன்னோர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து, மலர்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர். சிலர் இறந்த…

Read More

கால்நடைகள் சாலையில் திரிந்தால் மதுரை மாநகராட்சி எச்சரிக்கை

மதுரை, நவ.3-மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சாலைகள், பொது இடங்களில் சுற்றித் திரியும் கால்நடைகளைப் பிடிக்கும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், நேற்று வைகை ஆற்றின் வடகரை மற்றும் தென்கரைப் பகுதிகளில் சுற்றித் திரிந்த 4 மாடுகள் மற்றும் ஒரு கன்றுக்குட்டி பிடிக்கப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களுக்கு ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த ஜூன் 2026 முதல் தற்போது வரை மாநகராட்சிப் பகுதிகளில் சுற்றித் திரிந்த 94 கால்நடைகள் பிடிக்கப்பட்டு, கால்நடைப்…

Read More

தமிழ்நாட்டு மக்கள் கண்ணீர் விடுகிறார்கள்:உங்களுக்கு எதற்கு ஆட்சி அதிகாரம்-முதல்வர் பதவி?விஜய்யை விளாசிய உதயகுமார்

மதுரை, நவ.3-அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமாரின் நேற்றைய வீடியோ பதிவு: தமிழ்நாட்டில் தொடர்ந்து நிலவும் சட்டம், ஒழுங்கு பிரச்னை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாதுகாப்புக் குறைபாடு, வரலாறு காணாத வகையில் விலைவாசி உயர்வு போன்றவை அனைத்து தரப்பு மக்களையும் பாதித்துள்ளது.முதல்வராகும் முன்பு குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பு குறித்து விஜய் பேசினார். இப்போது அவரது அவதாரம் பூஜ்ஜியமாக இருக்கிறது. பூஜ்ஜியத்திலேதான் ராஜ்ஜியம் செய்கிறார். போஸ் கொடுப்பதில்தான் அவர் பாஸாக இருக்கிறார்.போஸ் கொடுத்தால் விலைவாசி குறையுமா? சட்டம் ஒழுங்கை…

Read More

மதுரை ரவுடி ‘குட்டி சாக்கு’ என்ற சூர்யா படுகொலை: இரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

மதுரை, நவ.3-மதுரை சமயநல்லூரில் பிரபல ரவுடி ‘குட்டி சாக்கு’ என்ற சூர்யா வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.பழைய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தில் மது அருந்திக் கொண்டிருந்த சூர்யாவை மர்ம நபர்கள் வெட்டிக் கொன்றனர். முன் விரோதம் காரணமா என போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.குட்டி சாக்கு என்கிற ரவுடி சூர்யா மீது கொலை, அடிதடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், நேற்று இரவு, பழைய ஊராட்சி அலுவலக கட்டிடத்தில் அவர் மது அருந்திக்…

Read More

பசும்பொன்னில் ஸ்டாலினுக்கு பாதுகாப்பு குறைபாடா? தங்கம் தென்னரசு குற்றச்சாட்டுக்கு நிர்மல் குமார் பதில்

மதுரை, நவ.3-முன்னாள் முதல்வர் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பில் எந்தக் குறைபாடும் இல்லை என சட்டத் துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கமளித்துள்ளார்.பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழாவில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த நிர்மல் குமார், கோரிப்பாளையம் பகுதியில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, அனைவருக்கும் என்ன பாதுகாப்பு வழங்கப்பட்டதோ அதே பாதுகாப்புதான் முன்னாள் முதலமைச்சருக்கும் வழங்கப்பட்டது.இதில் எந்தவிதமான கட்டுப்பாடுகளும்…

Read More

கே.என் நேரு மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தடையில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி

சென்னை, நவ.3-தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் வேலை வாய்ப்பு முறைகேடு தொடர்பான ஊழல் குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த உத்தரவின் மூலம், அவர் மீது வழக்குப்பதிவு செய்வதற்கான தடைகள் நீங்கியுள்ளன.நீதிபதிகள் திபங்கர் தத்தா மற்றும் ஷீல் நாகு ஆகியோர் அடங்கிய…

Read More

ஊழலை ஒழிக்க வந்த உத்தமர்களின் ஆட்சியில்ரூ. 5 கோடி பேரமா? டிடிவி தினகரன் கேள்வி

சென்னை, நவ. 3-ஊழலை ஒழிக்க வந்த உத்தமர்களின் ஆட்சியில் 5 கோடி பேரமா? அரசு பொறுப்பில் இருப்பது இடைத்தரகர் பணிக்கா? அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவிக்கு, தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லயோலா மணி அவர்களின் மூலம் 5 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாகப் பள்ளிக்கல்வி மற்றும் தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சரே நேரடி வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.உண்மையைப் பேசுவதில் அரிச்சந்திரனுக்கே Tough…

Read More

பட்டினபாக்கம்புதிய தலைமை செயலகத்திற்காக பழைய குடியிருப்புகளைஇடிக்க முடிவு: தமிழக அரசு திடீர் அறிவிப்பு-பதற்றம்

சென்னை, நவ.3-சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைப்பதற்கு மீனவ மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாகக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அங்குள்ள பழைய வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகளை இடிப்பதற்கான டெண்டரை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கை அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் மக்கள் மத்தியில் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.தற்போது சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வரும் தலைமைச் செயலகத்தில் இடநெருக்கடி நிலவுவதால், நவீன…

Read More