கூட்டணி அமைக்க வேண்டிய கட்டாயம் :சீமானுடன் பேச்சு நடத்திய தம்பிகள்

சென்னை, நவ. 12-அம்பை தொகுதியில் சீமான் களமிறங்கும் முடிவை அவர் மட்டும் தனிச்சையாக எடுத்தது நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை புலம்ப வைத்திருக்கிறது. நாதகவின் வாக்கு சதவிகிதம் தொடர்ந்து குறைந்து வரும் சூழலில், மீண்டும் ஒரு தோல்வியை எதிர்கொள்ளக் கூடிய வலிமை கட்சியினருக்கு இல்லை என்றும் பேசத் தொடங்கியுள்ளனர்.சட்டசபைத் தேர்தலில் நாதக போட்டியிட்ட 234 தொகுதிகளில் டெபாசிட் இழந்து படுதோல்வியை சந்தித்தது. 8.2% வாக்குகளை வைத்திருந்த நாதகவின் வாக்குகள், 4%ஆக குறைந்தது. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி…

Read More

பாவம் பெண் கலெக்டர்: யாருக்கும் பாதுகாப்பு இல்லை- கனிமொழி

சென்னை, நவ. 12-தவெகவினர் அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள். துணை சபாநாயகர் மீது அடிதடி புகார், பெண் மாவட்ட ஆட்சியருக்கே ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய எம்எல்ஏ என சர்ச்சைகள் நீண்டு வருகிறது. தவெகவினர் தமிழகத்திற்கு எதிராக படையெடுத்துள்ளனர். அதிகாரிகள் மக்கள் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என கனிமொழி வேதனை தெரிவித்துள்ளார்.சென்னையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “இந்த ஆட்சியில் யாராக இருந்தாலும் பாதுகாப்பு இல்லை. எதிர்க்கட்சிகள் சட்டம் ஒழுங்கு…

Read More

முதலமைச்சர் விஜய் தலைமையில் தவெகஎம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மாமல்லபுரத்தில் நடந்தது

சென்னை, நவ. 12-சென்னை தனியார் விடுதியில் நேற்று காலை 11 மணிக்கு தவெகவின் 109 எம்.எல்.ஏக்களையும் நேரில் அழைத்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். முதல்வர் விஜய்.நவம்பர் 13 ஆம் தேதிக்குப் பிறகு ஆட்சியின் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர வாய்ப்பிருப்பதால் அதற்கு முன்னெச்சரிக்கையாகத்தான் இந்த கூட்டம் நடைபெற்றது.கடந்த மே 13 ஆம் தேதி சட்டமன்றத்தில் தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபித்தது. மரபுப்படி பெரும்பான்மை நிரூபிக்கப்பட்ட 6 மாதங்களுக்கு பிறகே அடுத்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை…

Read More

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தனியார் நிறுவன ஒப்பந்தப் பணியாளர்கள் வேலைநிறுத்தம்

மதுரை, நவ.4-மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தப் பணியாளர்கள் 750-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.இவர்கள் ஊதிய உயர்வு, வார விடுமுறை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த அக்டோபரில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், மன் அருள் சுந்தரேசkumar தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், அவர்களுக்கு ஊதிய உயர்வு, வார விடுமுறை வழங்குவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அனைவருக்கும் ஊதிய விவரச் சீட்டு வழங்கப்படும், பிடித்தம் செய்யப்படும் பணம் குறித்த விவரம் தெரிவிக்கப்படும், நாள்தோறும்…

Read More

மதுரை மாநகராட்சியில் தூய்மை பணியை மேற்கொள்ள புதிய ‘டெண்டர்’ பயோமெட்ரிக் வருகை பதிவு: வாகனங்களை கண்காணிக்க ஜிபிஎஸ் கட்டாயம்

மதுரை, நவ.4-மதுரை மாநகராட்சி 100 வார்டுகளில் ‘அவர்வேல்ஸ்’ தனியார் நிறுவனம் தூய்மைப் பணி மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் தூய்மைப் பணி திருப்திகரமாக இல்லை என மாநகராட்சி நிர்வாகத்தினரும், மக்கள் பிரதிநிதிகளும் அரசுக்கு தொடர்ந்து தெரிவித்து வந்தனர். குப்பையை முறையாக அகற்றாதது, தூய்மைப் பணி கூலியில் குறைபாடுகள் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் ஒப்பந்த நிறுவனத்தின் மீது எழுந்தது. தற்போது இந்நிறுவனத்தின் டெண்டர் கால முடிவடையும் நிலையில் உள்ளது. இதையடுத்து, நீண்ட காலமாக நிலவி வரும் தூய்மைப் பணி…

Read More

இடைத்தேர்தல் தொகுதிகளில் மட்டும் கவனம் ஏன்? முதல்வர் விஜய் மீது எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

சென்னை, நவ.4-தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் சென்று மக்களின் குறைகளைக் கேட்க வேண்டிய முதலமைச்சர், இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ள தொகுதிகளில் மட்டும் நலத்திட்ட உதவிகள் வழங்கி தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.மேலும், அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:தமிழகத்தில் மொத்தம் 234 சட்டப்பேரவைத்…

Read More

கோவையில் இன்று திமுக புதிய அலுவலக கட்டிட பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார் முக.ஸ்டாலின்

கோவை, நவ.4-சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்து 6 மாதங்களாகியும் தமிழக அரசியலின் பரபரப்பு ஓயவில்லை. 50 ஆண்டு கால அரசியலில் எதிரும், புதிருமாக இருந்த திமுக மற்றும் அதிமுக இணைந்து தவெகவை மாறி மாறி விமர்சனம் செய்கிறார்கள்.முன்னாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று கோவை செல்லவுள்ளார். பெரியார் அறிவுலகத்துக்காக பாராட்டு விழா நடைபெறவுள்ளது. இதேபோல திமுகவின் பல நாள் கனவை நிறைவேற்றும் செயலிலும் ஈடுபட போகிறார்.தமிழக அரசியலில் அரை நூற்றாண்டு திராவிட இயக்கங்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. திமுக…

Read More

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தவெகெவற்றி பெறுமா? 70 எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி

சென்னை, நவ. 4-தமிழக வெற்றிக் கழகத்தின் அரசு சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபித்து ஆறு மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையில், அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படுகிறது என்றும், ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் அதிருப்தி நிலவுவதாகவும் வெளியாகும் தகவல்கள் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.முதலமைச்சர் சி. விஜய் தலைமையிலான தவெக அரசு கடந்த மே மாதம் சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று தனது பெரும்பான்மையை நிரூபித்தது. இந்த வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவாக…

Read More

பெருந்துறையில் ரூ.1,100 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார்

பெருந்துறை, நவ.4-தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் பெருந்துறைக்கு சென்றார். முன்னதாக தனி விமானம் மூலம் கோவை சென்றார். கோவையில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவை விமான நிலையத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கட்சியினர், அதிகாரிகள் வரவேற்றனர். பின்பு விமான நிலையத்தில் இருந்து ரோடு ஷோ மூலமாக ஈரோடு புறப்பட்டுச் சென்றார்.விஜயமங்கலத்தைக் கடந்த பிறகு, சிப்காட் பகுதி வழியாக ஈரோடு சாலைக்கு வந்த முதல்வர், பெருந்துறை நகர்ப்பகுதி வழியாக விழா நடைபெறும் இடத்திற்குச் சென்றார். அரசு விழா…

Read More

மதுரை மாநகராட்சி பகுதிக்குள் பொருத்தமானஇடங்களில் சார்ஜிங் ஸ்டேஷன்கள்

மதுரை, நவ. 3-மதுரையில் மின்சார வாகனங்களுக்கான ஐந்தாண்டு செயல்திட்டம் தயாரிக்கும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக களம் இறங்கியுள்ளது. முதற்கட்டமாக நகரின் முக்கிய இடங்களில் சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்கப்படவுள்ளன.தமிழக மின்சார வாகன கொள்கை – 2023ன் கீழ் தேர்வு செய்யப்பட்ட 6 நகரங்களில் மதுரையும் ஒன்று. இதற்காக மாநகராட்சி கமிஷனர் தலைமையில் ‘நகர மின்சார வாகனப் பிரிவு’ கடந்த பிப்ரவரியில் அமைக்கப்பட்டது. இந்நிலையில் மதுரையில் மின்வாகனங்களுக்கான ஐந்தாண்டு செயல்திட்டம் தயாரிக்க, போக்குவரத்து, நெடுஞ்சாலை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட…

Read More