அனைத்து ரயில் நிலையங்களிலும் 6 மாதங்களில் பேட்டரி கார் வசதிஉயர் நீதிமன்றம் கிளை உத்தரவு

மதுரை, நவ.13-அனைத்து ரயில் நிலையங்களிலும் 6 மாதங்களில் பேட்டரி கார் வசதி ஏற்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.தஞ்சாவூரைச் சேர்ந்த விமலநாதன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: திருச்சி ரயில் நிலையத்தில் கடந்த 2017-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பேட்டரி கார் சேவை தொடக்கத்தில் இலவசமாக வழங்கப்பட்ட நிலையில், 2018-ம் ஆண்டு முதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சேவை மதுரை ரயில் நிலையத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது. மதுரை மற்றும்…

Read More

தவறு செய்த ஒருவரை கூட கண்டுபிடிக்க முடியவில்லையா?பெரியார் அறிவுலக முறைகேடு விவகாரத்தில் நீதிமன்ற கிளை கேள்வி

மதுரை, நவ. 13-பெரியார் அறிவுலக புத்தக கொள்முதல் முறைகேட்டில் தவறு செய்த ஒருவரை கூட கண்டுபிடிக்க முடியவில்லையா என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.தமிழ்நாட்டில் நூலகங்களுக்கு புத்தகம் கொள்முதல் செய்வது தொடர்பான நீதிமன்ற அவதிப்பு வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர், அகல் விளக்கு பதிப்பகம் உள்ளிட்ட மூன்று பதிப்பகங்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். முறைகேடு குறித்து விரிவான அறிக்கை தாக்கல்…

Read More

பெரியாறு, வைகையில் மோட்டார் மூலம் தண்ணீர் திருட்டு:மின் இணைப்புகளை ரத்து செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்

மதுரை, நவ. 13-முல்லை பெரியாறு அணையிலிருந்து வைகை அணை வரை மின் மோட்டார்கள் மூலம் 250 கனஅடி தண்ணீர், வைகை அணையிலிருந்து பேரணை வரை 100 கனஅடி தண்ணீர் திருடுவோரின் மின் இணைப்புகளை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.மதுரை தல்லாகுளம் நீர்வளத் துறை மண்டல தலைமை அலுவலகத்தில் பெரியாறு வைகை வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் சாம் இர்வின் தலைமையில், கோட்ட செயற்பொறியாளர் சிவபிரபாகர் முன்னிலையில் 2010 அரசாணையில் திருத்தம் செய்வது தொடர்பாகவும், இருபோக…

Read More

மதுரை தனிஷ்க் நகைக்கடையில்500 பவுன் நகைகள் கொள்ளை

மதுரை, நவ. 13-அதிகாலை 3 மணியளவில் துணிகரம்மதுரை பைபாஸ் பகுதியில் செயல்பட்டு வரும் டாடா குழுமத்தின் தனிஷ்க் நகைக்கடையில் நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது.கடையில் இருந்த சுமார் 500 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு சுமார் ரூ.50 கோடி எனக் கூறப்படுகிறது.அண்மையில் திறக்கப்பட்ட இந்த நகைக்கடையின் பின்புறம் வழியாக கொள்ளையர்கள் உள்ளே நுழைந்து நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாலை…

Read More

மதுரை கூட்டுறவு சங்கத்தில் நகை மாயம்? கடனை கட்டியும் நகை கிடைக்கவில்லை: 500 சவரன் எங்கே?

மதுரை, நவ. 13-மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நகைகளை அடமானம் வைத்து கடன் வாங்கிய பொதுமக்கள், கடனை முழுமையாகச் செலுத்தியும் தங்களது நகைகள் திரும்பக் கிடைக்கவில்லை என புகார் தெரிவித்துள்ளனர்.சுமார் 500 சவரன் நகைகள் மாயமானதாக கூறப்படும் நிலையில், சங்க அலுவலகம் முன்பு பெண்கள் உட்பட ஏராளமானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது திருமங்கலத்தில்?திருமங்கலம் அருகே வீரபெருமாள்புரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்…

Read More

ஓராண்டாக பூட்டிக்கிடந்த மதுரை மாநகராட்சி மேயர் அலுவலகம் மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது

மதுரை, நவ.13-மதுரை மாநகராட்சியில் திமுக மேயர் ராஜினாமா வால் ஓர் ஆண்டாக பூட்டிக் கிடந்த அவரது மேயர் அலுவலகம் முழுவீச்சில் சுத்தப்படுத்தப்பட்டு துணை மேயர் நாகராஜனுக்காக தயாராகி வருகிறது.மதுரை மாநகராட்சியில் சொத்துவரி முறைகேடு புகார் காரணமாக திமுக மேயராக இருந்த இந்திராணியின் கணவர் பொன்வசந்த், உட்பட 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உதவி ஆணையர் உட்பட 18 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 5 மண்டலத் தலைவர்களும் ராஜினாமா செய்தனர். கணவர் கைது செய்யப்பட்ட பிறகு மேயர் இந்திராணியும்…

Read More

வாடிப்பட்டி தாலுகாவில் அரசு நிலங்கள் அபகரிப்பு :தாசில்தார் சுந்தர் உடந்தைகலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?

மதுரை, நவ.13-மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகாவைச் சேர்ந்த கல்வேலிப்பட்டி கிராமத்தில் சமயசெல்வன் என்பவரது இடத்தின் அருகில் கருப்பசாமி என்பவர் வாடிப்பட்டி தாசில்தார் சுந்தரை கையில் வைத்துக்கொண்டு வாடிப்பட்டி மற்றும் அலங்காநல்லூர் பகுதியில் உள்ள மலைக்கிராமங்களில் உள்ள பல லட்சக்கணக்கில் மதிப்பிலான அரசு நிலத்தை வாடிப்பட்டி தாசில்தார் சுந்தர் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு உண்மையான தனியார் நிலத்தின் அருகில் உள்ள அரசு நிலத்தை சேர்த்து பல மோசடிகள் நிறைவேறி வருகிறது.இந்த விவரம் குறித்து மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் கல்வேலிப்பட்டி…

Read More

ஆறு மாதங்களில் ரூ.148 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்பு – இந்து சமய அறநிலையத்துறை சாதனை

சென்னை, நவ. 13-தவெக பொறுப்பேற்ற ஆறு மாதங்களில் ரூ.148.91 கோடி மதிப்பிலான 163.40 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.மேலும், 17,707.10 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு, மேற்படி புலங்களில் 13.233 எல்லை கற்கள் நடப்பட்டுள்ளன.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, ‘சமய இந்து சமய அறநிலையக் கொடைகள் சட்டப்பிரிவு 78-ன் கீழ், இணை ஆணையர் நீதிமன்றங்களில் 23,815 எண்ணிக்கையிலான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, அவற்றில் 9,125 வழக்குகளில் இறுதி ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மாண்புமிகு இந்து…

Read More

தவெக எம்.எல்.ஏ.க்கள் திமுகவுடன் கூட்டு:முதல்வர் விஜய்யை அதிர வைத்த உளவுத்துறை

சென்னை, நவ. 13-த.வெ.க., அரசு பொறுப்பேற்று ஆறு மாதங்கள் முடிந்த நிலையில், அரசு அலுவலகங்களில் லஞ்சம், ஊழலை குறைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. இது, மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற அதே நேரத்தில், விலைவாசி உயர்வு, மின்வெட்டு, கொலை சம்பவங்கள் அதிகரிப்பு போன்றவை, மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.மேலும், த.வெ.க., அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் சிலர், தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். இந்நிலையில், த.வெ.க., – எம்.எல்.ஏ.,க்களை வளைத்து, ஆட்சியை கவிழ்க்க. தி.மு.க., – அ.தி.மு.க., தரப்பில்…

Read More

பண்டிகை நாட்களில் மொத்தமாக டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடும் முதல்வர் விஜய்

சென்னை, நவ. 13-தமிழக வெற்றி கழக ஆட்சியில் டாஸ்மாக் மது கடைகளில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த நிலையில் சமீபத்தில் தீபாவளி பண்டிகை அன்று சட்டம் ஒழுங்கு பிரச்சனை, தமிழக வெற்றிக்கழக அரசுக்கு புதிய தலைவலியாக அமைந்தது. 10க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. மது போரை தான் இதற்கு காரணம் எனவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில் பண்டிகை நாட்களிலும், அதற்கு முந்தைய நாளும் டாஸ்மாக் மது கடைகளை முழுமையாக மூட…

Read More