கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ மீது அதிமுக பெண் நிர்வாகி புகார்: குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கள்ளக்குறிச்சி, நவ. 13-கள்ளக்குறிச்சி தொகுதியின் தவெக எம்.எல்.ஏ அருள்விக்னேஷ் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக நிர்வாகி சென்னை டிஜிபி அலுவலகத்தில் நேற்று புகார் அளித்துள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியர் பத்மஜாவுக்கு, அதே தொகுதியின் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆபாசமான வாட்ஸ்அப் குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், மதுபோதையில் ஆட்சியரின் இல்லத்திற்குச் சென்று பா@யல் தொல்லை கொடுத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.இந்த சம்பவத்திற்குக் கூட்டணிக் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் என அனைத்து அரசியல் கட்சிகளும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து…

Read More

யார் இந்த எம்.வி.முரளிதரன்? மணிப்பூர் கலவரத்திற்குவித்திட்டவர்: பதவி வழங்கிய தவெக அரசு

சென்னை, நவ. 13-தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி எம்.வி. முரளிதரன் நியமனம் செய்து தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது.இந்நிலையில் மணிப்பூர் கலவரத்துக்கு வித்திட்டவர் அம்மாநில உயர் நீதிமன்றத்தின் பொறுப்புத் தலைமை நீதிபதியாக இருந்த எம்.வி. முரளிதரன் என குறிப்பிட்டு, நாம் தமிழர் கட்சி இடும்பாவனம் கார்த்திக் கடுமையாக விமர்சித்துள்ளார்.தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டம் வாலாஜா தாலுகாவில் உள்ள மணியம்பட்டு கிராமத்தில் உள்ள ஒரு விவசாய குடும்பத்தில் ஏப்ரல் 16 ஆம் தேதி 1962…

Read More

“ரூ.70 கோடி பேரம் ஆட்சியைக் கவிழ்க்க சதி”:உளவுத்துறை அறிக்கையால் விஜய் அதிர்ச்சி

சென்னை, நவ. 13-வெளியாகியுள்ள அரசியல் செய்தித் தகவல்களின்படி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பதவியேற்று ஆறு மாதங்களை நிறைவு செய்துள்ள நிலையில், ஆட்சிக்கு எதிராக எழும் அரசியல் சவால்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு விவகாரங்களைக் கருத்தில் கொண்டு முதல்வர் விஜய் அடுத்தடுத்து இரண்டு முக்கிய ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியுள்ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக காவல்துறை தலைவர் மகேஷ் குமார் அகர்வால் மற்றும் உளவுத்துறை ஐ.ஜி ஆஸ்ரா கார்க் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர்,…

Read More

ரூ.25 கோடியில் இ-பைக் தயாரிப்பு நிறுவனம்:முதல்வர் விஜய் திறந்து வைத்தார்

சென்னை, நவ. 13-சென்னையை தலைமையிடமாக கொண்டு மணப்பாக்கத்தில் செயல்படும் Raptee.HV நிறுவனம், மின்சார கார் தொழில்நுட்பத்தை இருசக்கர வாகனங்களில் அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாக விளங்கும் முழுமையான மின்சார மோட்டார் சைக்கிள் (இ-பைக்) தயாரிப்பு நிறுவனமாகும்.டெல்சா, விப்ரோ மற்றும் சர்வதேச வாகன தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட தமிழ்நாட்டில் உள்ள எம்ஐடி, குரோம்பேட்டை மற்றும் என்ஐடி, திருச்சி பொறியியல் கல்லூரிகளில் பயின்ற தமிழ்நாட்டை சேர்ந்த பொறியாளர்களால் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், தனது பிரத்யேக தொழில்நுட்ப தளத்தை உருவாக்கியுள்ளது.இதன்மூலம் உயர் மின்னழுத்த…

Read More

எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்கொள்ள தவெக அரசு தயார்

ஈரோடு, நவ. 13-எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டு வந்தால் அதனைத்தான் சந்திக்க தமிழக அரசு தயாராக இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.மேலும் அவரிடம் தமிழகத்தில் அதிகரித்திருக்கக்கூடிய கொலை விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பியபோது, மனிதர்களிடையே வெறுப்பு மனப்பான்மையும் தவறான எண்ணங்களும் அதிகரித்திருப்பதால் தான் அதிக அளவு கொலை சம்பவங்கள் நடைபெறுவதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.2026 சட்டமன்றத் தேர்தலில் வென்ற தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைப் பிடித்தது. ஆனால் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 118…

Read More

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த போட்டோ ஷூட் கவுரவ்குமார்

அவனியாபுரம், நவ. 12-மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு குறித்து மாநகராட்சி கமிஷனர் போட்டோஷூட் கவுரவ் குமார் நேற்று ஆய்வு மேற்கொண்டு ஆலோசனை நடத்தினார்.அவனியாபுரத்தில் ஆண்டு தோறும் ஜன. 14 ல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். அடுத்து 2027 ஜன.14ல் ஜல்லிக்கட்டு நடக்க உள்ளதால், முன்னேற்பாடு குறித்து மாநகராட்சி கமிஷனர் கவுரவ் குமார், செயற்பொறியாளர்கள் அசோக் சுதாகர், மோகன், உதவி செயற்பொறியாளர் மயிலேறிநாதன், இளநிலை பொறியாளர் செல்வ விநாயகம், சுகாதார அலுவலர் திருமால், சுகாதார ஆய்வாளர் ராஜா அலாவுதீன்,…

Read More

கழிவுநீரில் தத்தளிக்கும் மேலுார் அரசு மருத்துவமனை

மேலுார், நவ. 12-மேலுார் அரசு மருத்துவமனையில் செப்டிக் டேங்க் நிரம்பி, கழிவுநீர் மருத்துவமனை வளாகம், பிணவறையில் தேங்குவதால் நோயாளிகளின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகி உள்ளது.மேலுார் தாலுகா அரசு மருத்துவமனைக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள், புறநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவமனையில் செப்டிக் டேங்க் நிரம்பி கழிவு நீர் வெளியேறி மருத்துவமனை வளாகத்தில் ஆறாக ஓடுகிறது. நோயாளிகள் கூறியதாவது : சிகிச்சை பெறும் வார்டு பகுதியில் செப்டி டேங்க் தண்ணீர் வெளியேறி துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடாக காணப்படுகிறது. இதனால் படுக்கையில்…

Read More

ஜிஎஸ்டி வரி விதிப்பை மாற்றியமைக்க வேண்டும்:உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத்தினர் வலியுறுத்தல்

மதுரை, நவ. 12-நாட்டின் வரி வருவாயை கவனத்தில் கொண்டு, ஜிஎஸ்டி வரி விதிப்பை மாற்றி அமைக்க வேண்டும் என தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத்தின் சாா்பில் வலியுறுத்தப்பட்டது.நாட்டின் வரி வருவாயை கவனத்தில் கொண்டு, ஜிஎஸ்டி வரி விதிப்பை மாற்றி அமைக்க வேண்டும் என தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத்தின் சாா்பில் வலியுறுத்தப்பட்டது.இதுகுறித்து அந்தச் சங்கத்தின் கௌரவ ஆலோசகா் எஸ். பி. ஜெயபிரகாசம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாட்டின் வரி வருவாய் உயரும் போது, ஜிஎஸ்டி…

Read More

விஜய் ஆட்சியில் 6 வருஷம் தமிழ்நாடு பின்னோக்கி சென்றுவிட்டது-ஆர்பி.உதயகுமார் தாக்கு

மதுரை, நவ.12-முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக அரசில் வெளிப்படைத்தன்மை இல்லை எனவும் ,வளர்ச்சித் திட்டங்களை கிடப்பில் போட்டுவிட்டு முன்னுக்குப் பின் அரசாணை வெளியிடுவதும், அதன்பின் அதனை ரத்து செய்வதும் என முரண்பாடான சூழல் நிலவுவதாகவும், 6 மாத தவெக ஆட்சியில் தமிழகம் ஆறாண்டு பின்னோக்கிச் சென்று விட்டது என விமர்சித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்.மதுரையில் பேசிய அவர்,” தவெக அரசு பொறுப்பேற்று 6 மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையில், தற்போது இந்த 6…

Read More