ஈரோடு, நவ. 13-
எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டு வந்தால் அதனைத்தான் சந்திக்க தமிழக அரசு தயாராக இருப்பதாக அமைச்சர் செங்கோட்டை
யன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.
மேலும் அவரிடம் தமிழகத்தில் அதிகரித்திருக்க
க்கூடிய கொலை விவகார
ங்கள் குறித்து கேள்வி எழுப்பியபோது, மனிதர்க
ளிடையே வெறுப்பு மனப்பான்மையும் தவறான எண்ணங்களும் அதிகரித்திருப்பதால் தான் அதிக அளவு கொலை சம்பவங்கள் நடைபெறுவதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் வென்ற தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைப் பிடித்தது. ஆனால் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 118 இடங்கள் தேவை என்பதால் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அதிகாரத்தைப் பிடித்தது. இடைத்தேர்தல் வெற்றிகளுக்குப் பிறகு தற்போது அது 109 ஆக மாறியிருக்கிறது. ஆனாலும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு இல்லைஎன்றால் ஆட்சி கவிழும் அபாயமே இருக்கிறது.
இதற்கிடையில் தான் கிட்டத்தட்ட 30 கோடி ரூபாய் கொடுத்து சட்டமன்றத்தில் நம்பிக்கை இல்லாத தீர்மானத்தி
ன்போது தவெகவுக்கு எதிராக வாக்களிக்க தன்னைப் பேரம் பேசியதாக மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ முஸ்தபா தெரிவித்திருந்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் அதிமுகவின் மன்னன் கைது செய்ய
ப்பட்ட சம்பவம் கூட நடந்தது. தொடர்ச்சியாக தவெக எம்.எல்.ஏக்கள் மீது எழுந்து வரும் அதிருப்தியும், தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஆட்சிக்கு எதிரான மனநிலையை அதிகரித்திருக்கக்கூடிய சூழலில், சட்டமன்றத்தில் நம்பிக்கை இல்லாத தீர்மா
னம் கொண்டுவரப்படுமா என்ற கேள்விகளும் எழுந்தி
ருக்கின்றன. மேலும் தொடர்ச்சியாக தவெக எம்.எல்.ஏக்கள் எதிர்க்கட்சி
களிடம் பணம் வாங்க விருப்பம் தெரிவிப்ப
தாகவும், அவர்களின் பிரச்சனைகள் என்ன
வென்று கேட்டு சரி செய்யவே எம்.எல்.ஏக்களின் ஆலோசனைக் கூட்டத்தை முதல்வர் விஜய் முன்னெடுத்தார் எனவும் ஒரு சில தகவல்கள் வெளியாகி வருகின்றன.
எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்கொள்ள தவெக அரசு தயார்
