admin

ஐந்து தொகுதிகளுக்கு தயாராகும் தவெகதிருச்சியில் முதல் மாநில மாநாடு

திருச்சி, அகக். 20–மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் கிடைத்த வெற்றியால் தவெக தலைமை மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறது.அடுத்தாக விராலிமலை, திருச்சி கிழக்கு, கரூர், அம்பாசமுத்திரம், பெருந்துறை, உள்பட ஐந்து தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாக ஆளும் கட்சியான தவெக திருச்சியில் பிரம்மாண்டமான மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இடைத்தேர்தலை எதிர்கொள்வதற்கும், கட்சியினரை உள்ளாட்சி தேர்தலுக்கு உற்சாகப்படுத்துவதும், இந்த மாநாட்டின் முக்கிய நோக்கங்களாக இருக்க வாய்ப்பு உள்ளது.முன்னதாக ஆளும் கட்சியான பின்னர் நடைபெற உள்ள இந்த…

Read More

மதுரை மாநகராட்சி அலுவலர்கள் மீது தாக்குதல், பணிப் பாதுகாப்பில்லை: நாள்தோறும் கூட்டம் போடும் ஆணையாளர் நடவடிக்கை எடுப்பாரா?

மதுரை, அக். 20- மதுரை மாநகராட்சி அலுவலர்கள் மீது தாக்குதல், மிரட்டல் சம்பவங்களால் பணியில் பாதுகாப்பில்லை என கொந்தளிக்கின்றனர். கமிஷனர் கறார் நடவடிக்கை எடுத்தால் தான் கட்டுப்படுத்த முடியும் என எதிர்பார்க்கின்றனர். நேற்று முன்தினம் சுகாதார ஆய்வாளர் ரமேஷ் தாக்கப்பட்டார். இதன் பின்னணியில், சுகாதாரப் பணிகளில் குறைந்த நபர்களை கணக்கு காட்டி அதிக நபர்களுக்கு சம்பளம் வாங்கும் முறைகேடை தட்டிக் கேட்க துணிந்ததால் ஆய்வாளர் தாக்கப்பட்டுள்ளார். தாக்குதலில் ஈடுபட்டவர் தினக்கூலி பணியாளர் என்றாலும், அவர் தொழிலாளர் சங்க…

Read More

மதுரை-குருவாயூர் விரைவு ரயிலில் அக்.22 முதல் ரூ.4 கோடி செலவில் தயாரான ‘விஸ்டாடோம்’ பெட்டி இணைப்பு

மதுரை, அக். 20-தெற்கு ரயில்வேயில் முதல்முறை யாக கண் ணாடிக் கூரை கொண்ட ‘விஸ்டாடோம்’ பெட்டி அக்.22 முதல் மதுரை குருவாயூர் விரைவு ரயிலில் இணைத்து இயக்கப்பட உள்ளது.சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற் சாலையில் (ஐசிஎஃப்) சுற் றுலாப் பயணிகளை கவரும் விதமாக, கடந்த 2017-ம் ஆண்டு முதல் எல்எச்பி, ‘விஸ்டாடோம்’ சுற்றுலா ரயில் பெட்டிகள் தயாரிக் கப்படுகின்றன. இந்நிலை யில், தெற்கு ரயில்வேயில் முதல்முறையாக, மதுரை குருவாயூர் விரைவு ரயி லில்…

Read More

மதுரை தமுக்கம் மைதானத்தில் மரகத தையல் பயிற்சி பள்ளி சான்றிதழ் வழங்கும் விழாவெறும் ஒரு ரூபாயில் பெண்களுக்கு வாழ்வாதாரம்

மதுரை, அக். 20-மதுரை தமுக்கம் மைதானத்தில் விருதுநகரை தலைமையிடமாகக் கொண்டு 17 வருடங்களாக சேவை மனப்பான்மையுடன் இயங்கி வரும் மரகத தையல் பயிற்சி பள்ளி சார்பாக தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. திரைப்பட நடிகை ஷகிலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கெளரவித்தார்.‘தொடர்ந்து பேட்டி யளித்த மரகத தையல் பயிற்சி நிறுவனர் செல்வகுமார் பெண்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்று உயர வேண்டும் என்ற உயரிய…

Read More

போதையை விடு சிலம்பத்தை கையில் எடு உலக சாதனை நிகழ்வை துவங்கி வைத்தார் ஸ்டார் குருசாமி

மதுரை, அக். 20-மதுரை யாதவர் (இருபாலர்) கல்லூரியில் இளைஞர் விளையாட்டு (ம) கலாச்சார மேம்பாட்டுச் சங்கம் மற்றும் YSCDS BOOK OF WORLD RECORDS இணைந்து நடத்திய போதையை விடு சிலம்பத்தை கையில் ஏடு என்ற தலைப்பில் உலக சாதனை நிகழ்வு மற்றும் கலைத்தாய் விருது வழங்கும் வழங்கும் விழாவை ஸ்டார் அறக்கட்டளையின் நிறுவனர் ஸ்டார் குரு அவர்கள் தலைமையேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார், இச்சாதனை நிகழ்வில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல சிலம்பம் அகடமி சேர்ந்த…

Read More

வேண்டவே வேண்டாம் சாமி! தேடி வந்த வாய்ப்பை மறுத்த மைக்கேல் ஹஸி

டெல்லி: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்படும் வாய்ப்பை முன்னாள் ஆஸ்திரேலிய பேட்டர் மைக்கேல் ஹசி, நிராகரித்துள்ளார். இங்கிலாந்தின் புதிய டெஸ்ட் தலைமைப் பயிற்சியாளரான ஸ்டீபன் பிளெமிங்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்து பணியாற்றிய அனுபவம் கொண்ட ஹசியை, பேட்டிங் பயிற்சியாளர் பொறுப்பிற்காக பிளெமிங்கும் ஈசிபியும் அணுகினர். இருப்பினும், முன்னாள் இடதுகை ஆஸ்திரேலிய பேட்டரான மைக்கேல் ஹசி இந்த சலுகையை ஏற்க மறுத்துள்ளார். அதன் படி, கிரிக்கெட் ஆஸ்திரேலியா வழங்கிய பகுதிநேர ஆலோசகர் பொறுப்பை…

Read More

ரஜினியின் ‘ஜெயிலர் 2’ வெளியானது மீண்டும் டைகர் பாண்டியன் அதிரடி திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவான ‘ஜெயிலர் 2’ திரைப்படம் இன்று (அக்டோபர் 15) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் அடுத்த பாகத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், படம் வெளியாகியுள்ளதால் திரையரங்குகளில் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ரஜினிகாந்த் மீண்டும் ஓய்வுபெற்ற ஜெயிலர் டைகர் முத்துவேல் பாண்டியனாக நடித்துள்ளார். குடும்பத்தின் அமைதியான வாழ்க்கையைப் பாதிக்கும் புதிய அச்சுறுத்தலை எதிர்கொண்டு, மீண்டும் தனது…

Read More

ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு

சென்னை: சென்னையில் இன்று (ஆகஸ்ட் 25) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 80 ரூபாய்க்கும், கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 15,010 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று (ஆகஸ்ட் 24), தங்கம் விலை கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து, 15,030 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்து, 1,20,240 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பின், தங்கம் கிராம் 15,000 ரூபாயையும், சவரன் 1.20…

Read More

“சிறையிலேயே செத்து விடுவார்” இம்ரான் கானைக் காப்பாற்ற ஆஸ்திரேலிய அரசிடம் 7 கேப்டன்கள் வைத்த அவசர கோரிக்கை

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நாட்டின் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான், ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மற்றும் சிறை நிலைமைகள் குறித்து கவலை தெரிவித்து, ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன்கள் 7 பேர் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வாங்கிடம் (Penny Wong) தூதரக ரீதியிலான தலையீட்டை வலியுறுத்தியுள்ளனர். “சிறையிலேயே உயிரிழக்கக் கூடும்”: கிரெக் சேப்பல் அச்சம் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான கிரெக் சேப்பல்,…

Read More

43 பத்திரிகையாளர்கள் கைது: அத்துமீறிய செயல் காவல்துறையை கண்டித்து ெடல்லி பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்

டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நடந்த போராட்டத்தில், செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக ‘கமிட்டி டு ப்ரோடெஸ்ட் ஜர்னலிஸ்ட்’ (CPJ) என்கிற அமைப்பு செய்தியை வெளியிட்டு இருக்கிறது. வாக்காளர் பட்டியலில் நடந்த முறைகேடுக்கு பொறுப்பேற்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அக்டோபர் 10,11 தேதிகளில் டெல்லி, அகமதாபாத், புனே மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த…

Read More