அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த போட்டோ ஷூட் கவுரவ்குமார்

அவனியாபுரம், நவ. 12-
மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு குறித்து மாநகராட்சி கமிஷனர் போட்டோஷூட் கவுரவ் குமார் நேற்று ஆய்வு மேற்கொண்டு ஆலோசனை நடத்தினார்.
அவனியாபுரத்தில் ஆண்டு தோறும் ஜன. 14 ல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். அடுத்து 2027 ஜன.14ல் ஜல்லிக்கட்டு நடக்க உள்ளதால், முன்னேற்பாடு குறித்து மாநகராட்சி கமிஷனர் கவுரவ் குமார், செயற்பொறியாளர்கள் அசோக் சுதாகர், மோகன், உதவி செயற்பொறியாளர் மயிலேறிநாதன், இளநிலை பொறியாளர் செல்வ விநாயகம், சுகாதார அலுவலர் திருமால், சுகாதார ஆய்வாளர் ராஜா அலாவுதீன், உதவி கமிஷனர் தமிழரசன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
பின்பு திருப்பரங்குன்றம் சாலையில் ஜல்லிக்கட்டு வாடி வாசல், விழா மேடை, பரிசு பொருள் வழங்கும் இடம், வாடிவாசலுக்கு காளைகள் வரும் பகுதி, மாடுபிடி வீரர்கள் பரிசோதனை முகாம், காளைகள் பரிசோதனை முகாம், வீரர்கள், காளைகளுக்கான முதலுதவி மையங்கள், வாகன போக்குவரத்து மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
வழக்கமாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி குறித்து ஒருவாரம் முன்னதாக ஆய்வுகள் நடைபெறும். இந்தாண்டு 2 மாதங்களுக்கு முன்பே கமிஷனர் போட்டோஷூட் கவுரவ் குமார் ஆய்வு நடத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *