மதுரை-குருவாயூர் ‘விஸ்டாடோம்’ கண்ணாடி கூரை ரெயில் சேவை தொடங்கியது

மதுரை, அக். 23-
மேற்கு தொடர்ச்சி மலையின் எழில்மிகு இயற்கைக் காட்சிகளை ரசித்தபடி பயணம் செய்யும் வகையில், மதுரை – குருவாயூர் – மதுரை ரயில்க
ளில் அறிமுகப்படுத்தப்பட உள்ள ‘விஸ்டாடோம்’ ரயில் பெட்டிக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
முன்பதிவு தொடங்கியதும் அனைத்து இருக்கைகளும் நிரம்பியுள்ளன. இதனால், பயணச்சீட்டுகளுக்கான காத்திருப்போர் பட்டியலும் நீடித்து வருகிறது.
மதுரை – புனலூர் – கொல்லம் ரயில் பாதை மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகள் வழியாகச் செல்கிறது. இந்தப் பாதையில் பயணம் செய்யும் சுற்றுலாப் பயணிகள் மலைகள், பசுமையான வனப்பகுதிகள், பள்ளத்தாக்குகள் உள்ளிட்ட இயற்கைக் காட்சிகளை முழுமையாக ரசிக்கும் வகையில், அகன்ற கண்ணாடி ஜன்னல்கள் மற்றும் கண்ணாடி மேற்கூரையுடன் கூடிய ‘விஸ்டாடோம்’ ரயில் பெட்டியை அறிமுகப்படுத்த தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, மதுரை – குருவாயூர் – மதுரை விரைவு ரயில்களில் (16327/16328) அக்டோபர் இன்று முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி வரை இந்தப் பெட்டியை இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மதுரை ரயில்வே கோட்டத்தில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படும் இந்த வசதி, இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளி
டையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் இருந்து புறப்படும் குருவாயூர் ரயிலில் வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விஸ்டாடோம் பெட்டி இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், குருவாயூரில் இருந்து மதுரைக்குப் புறப்படும் ரயிலில் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமைகளில் இந்த வசதி செயல்படுத்தப்பட உள்ளது. இந்த விஸ்டா
டோம் பெட்டிக்கான முன்பதிவு தொடங்கியவுடன் அனைத்து இருக்கைகளும் நிரம்பிவிட்டன.
ரயில் பயணச்சீட்டுகளை வழக்கமாக 60 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்ய முடிவதால், டிசம்பர் 20ஆம் தேதி வரையிலான பயணங்களுக்கு தற்போது காத்திருப்போர் பட்டியல் நீடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயற்கை அழகை ரசித்தபடி பயணம் செய்யும் தனித்துவமான அனுபவம் கிடைப்பதால், இந்த ரயில் பெட்டிக்கு முன்பதிவு தொடங்கிய உடனேயே அதிகமான பயணிகள் ஆர்வம் காட்டியுள்ளனர். இதன் மூலம், சுற்றுலா சார்ந்த ரயில் பயணங்க
ளுக்கான வரவேற்பு வெளிப்பட்டுள்ளது.
விஸ்டாடோம் பெட்டியில் பயணிக்கும்
போது, அகன்ற கண்ணாடி ஜன்னல்கள் மற்றும் கண்ணாடி மேற்கூரை வழியாக மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கைக் காட்சிகளை விரிவாகக் கண்டு ரசிக்க முடியும்.
உயரமான மலைகள், பசுமையான வனப்பகுதி
கள், பள்ளத்தாக்குகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் எனப் பல்வேறு இயற்கை எழில் நிறைந்த பகுதிகளைப் பயணத்தின்போது பார்க்கலாம்.
ராஜபாளையம், தென்காசி, செங்கோட்டை, புனலூர், கொல்லம், செங்கனூர், கோட்டயம், திருச்சூர் உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் செல்லும் இந்தப் பயணம், இயற்கை ஆர்வலர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ரயில் பெட்டியில் மதுரையில் இருந்து பயணம் செய்வதற்கான கட்டண விவரங்கள் வருமாறு:
மதுரை – புனலூர்: ரூ.1,010, மதுரை – கொல்லம்: ரூ.1,140, மதுரை – குருவாயூர்: ரூ.1,875
இந்தச் சேவை அடுத்த ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், ரயில்வேயின் முன்பதிவுக் காலவரம்புக்கு ஏற்ப பயணிகள் தங்களுக்கான பயணச்சீட்டுகளை முன்கூட்டியே பதிவு செய்யலாம்.
அனைத்து இருக்கை
களும் நிரம்பியுள்ள நிலையில், இந்த விஸ்டா
டோம் ரயில் சேவை சுற்றுலாப் பயணிகளி
டையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *