திருப்பரங்குன்றம்,
நவ. 24-
திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
அதில், ‘சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால நிவாரணமாக கார்த்திகை திருநாள் அன்று மட்டும் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கல்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கி உத்தரவிடப்படுகிறது. அதாவது திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கல்தூணில் ஒருமுறை மட்டும் தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்படுகிறது. இந்த உத்தரவு என்பது இடைக்கால உத்தரவு ஆகும். எனவே பல்வேறு நிபந்தனைகளுடன் இந்த அனுமதி வழங்கப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்ப
ட்டிருந்தது.
இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ‘திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரம் குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். த.வெ.க. அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இன்று மாலை அல்லது நாளை காலை முடிவு அறிவிக்கப்படும்’ என்று தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் தான் திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில், தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு நேற்று (22.11.2026) தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ‘கடந்த 150 ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறையை மாற்றக்கூடாது. அவ்வாறு மாற்றினால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பாக ஏற்கனவே இரு நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் பஞ்சோலி கொண்ட அமர்வு வழங்கிய உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். கடந்த கால நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். இந்த வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த உத்தரவை வழங்கிய அரவிந்த் குமார் தலைமையிலான அமர்வு இன்று அலுவலில் இல்லை என்பதால் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க தமிழக அரசு முறையிடு செய்யவில்லை எனத் தெரிவிக்க்ப்பட்டுள்ளது. நாளை (24.11.2026) குருநானக் ஜெயந்தி என்பதால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறாது எனவும் தெரிவிக்கப்பட்டு
ள்ளது.
திருப்பரங்குன்றம் விவகாரம் : தமிழக அரசு சார்பில் முறையீடு இல்லை
