3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்ற முடியாது:மாநகராட்சி, நகராட்சி அலுவலர்களுக்கு செக்

சென்னை, நவ. 24-
தவெக ஆட்சிக்கு வந்து 6 மாதங்களுக்கு மேல் நிறைவடைந்துள்ளது. திமுக, அதிமுகவின் 50 ஆண்டு திராவிட ஆட்சிக்கு முடிவு கட்டி தவெக அரியணையில் ஏறியது.
லஞ்சம், ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சியை கொடுப்போம் என முதலமைச்சர் விஜய் சூளுரைத்தார். அவர் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளாட்சித்துறையிலேயே ஊழல் புகார் கொடிகட்டி பறக்கிறது. பிறப்பு இறப்பு சான்றிதழ், குடிநீர், சாலை, சாக்கடை, வரி உள்ளிட்ட பல சேவைகள் உள்ளாட்சித்துறைக்கு கீழ் வருகிறது. ஊழல் புகார் குறைவதில்லை என்பதால், நகராட்சி நிர்வாகத்துறை அலுவலர்கள் பணியிட மாறுதல் விதிகளில் மாற்றம் செய்யப்ப்டடுள்ளது.
உள்ளாட்சித்துறையில் அத்தியாவசிய தேவைகளின் எந்த தொய்வும் இருக்க கூடாது. சேவைகளை விரைந்து செய்ய வேண்டும் என்று விஜய் எச்சரித்தார். டெண்டரில் வெளிப்படை
த்தன்மை இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால் அந்த உத்தரவுகளை அதிகாரிகள் பின்பற்றுவ
தில்லை. கோவை மாநக
ராட்சியில் டெண்டரில் முறைகேடு நடக்கிறது. அதிகாரிகள் ஒத்துழைப்பதில்லை. எல்லாவற்றுக்கும் காசு கேட்கிறார்கள் என்று ஒப்பந்ததாரரர்கள் வெளிப்படையாக குற்றம் சாட்டினார்கள்.
நீண்டகாலமாக ஒரே துறையில் பணியாற்றுவோர் தான் ஊழல், முறைகேடுகளை தொடர்ந்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் நகராட்சி நிர்வாகத்துறையில் (மாநகராட்சி மற்றும் நகராட்சி) ஒரே அதிகாரி நீண்ட காலமாக பணியாற்றுவதற்கு செக் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்துறை அரசு கூடுதல் செயலாளர் ககன்தீப்சிங் பேடி அரசா
ணை வெளியிட்டுள்ளார். அதில் பணியிட மாற்றங்க
ளில் பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
அரசாணைப்படி, “இனி நகராட்சி நிர்வாகத்து
றையில் பணியிட மாற்றங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மே 31 வரை மட்டுமே செய்யப்படும். அதற்கான விண்ண
ப்பங்கள் மார்ச் 1 ஆம் தேதி 31 ஆம் தேதி வரை மட்டுமே வழங்கப்படும். ஜூன் 1 ஆம்தேதி முதல் மார்ச் 31 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் புகார், பதவி உயர்வு, நீண்டகால விடுப்பிற்கு பிறகு மீண்டும் பணிக்கு திரும்புதல், பதவி இறக்கம், சஸ்பெண்ட் ரத்து ஆகிய காரணங்களுக்காக மட்டுமே பணியிட மாற்றம் செய்யப்படும்.
ஏற்கனவே ஒரு இடத்தில் மூன்று வருடங்கள் பணியாற்றியவர்கள், காலி பணியிடத்திற்கு மாற்றப்படுவார்கள். அலுவலர்கள் யாரும் மூன்று வருடங்களுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்ற அனுமதி
க்கப்பட மாட்டார்கள். பதவி உயர்வு பெறுபவர்களுக்கு, வேறு உள்ளாட்சியில் தான் பணியமர்த்தப்படுவார்கள். இடமாற்றத்திற்கு விண்ணப்பிப்போர், தற்போதைய பணியில் குறைந்தபட்சம், ஒரு வருடமாவது கட்டாயம் பணியாற்றி இருக்க வேண்டும்.
ஒருவரின் கோரிக்கையை ஒரு முறை பரிசீலித்து பணியியிட மாறுதல் பெற்றால், அவர் அடுத்த இரண்டு வருடங்களுக்கு பணியிடற்றத்திற்கு விண்ணப்பிக்க முடியாது. அதே நேரத்தில் ஒருவர் மூன்று வருடங்களுக்கு மேல் ஒரு இடத்தில் பணியாற்றி, ஓய்வு பெறுவதற்கு ஒரு வருடத்திற்கு குறைவான காலம் இருந்தால், அவரை பணியிட மாற்றம் செய்ய தேவையில்லை. அலுவலர் ஒருவர் அவர்கள் வாழ்க்கை துணை பணிபுரியும் இடத்திற்கு, பணியிட மாற்றம் கேட்டால், தற்போதுள்ள இடத்தில், குறைந்தபட்சம் ஒரு வருடம் பணியாற்றி இருக்க வேண்டிய அவசியமில்லை.
அதேபோல 40 சதவீதம் மாற்றுத்திறனாளிகள், சிறுநீரகம், இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள், புற்றுநோய், மூளைகட்டியால் பாதிக்கப்பட்டவர்க
ளுக்கும், ஒரு வருடத்தில் பணி நிபந்தனையில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது”என்று கூறப்பட்டுள்ளது. இதனால் உள்ளாட்சித்துறையில் பணியாற்றுவோர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *