வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும்ஏர் ஹாரன்களை பயன்படுத்த தடை


மதுரை, நவ. 20-
சாலைகளில் செல்லும் போது அதிக ஒலி எழுப்பி பொதுமக்களின் காதுகளை பதம் பார்க்கும் ஏர் ஹாரன்களை வாகனங்களில் பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. ஆனால் தடை உத்தரவை மீறி மதுரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இயக்கப்படும் சில தனியார் வாகனங்களில் ஏர் ஹாரன்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் சாலைகளில் செல்லும் மற்ற வாகனஓட்டிகள், பாதசாரிகள் ஏர் ஹாரன் எழுப்பும் அதிக ஒலியால் அதிர்ச்சி அடைகின்றனர். மேலும், டூவீலரில் செல்வோரில் சிலர் அதிர்ச்சியில் கீழே விழுந்து அடிக்கடி விபத்தில் சிக்குவது தொடர்கிறது. இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *