தூத்துக்குடியில் கல்லூரி மாணவன் வெட்டி படுகொலை : பதற்றம்- போலீஸ் குவிப்பு
தூத்துக்குடி, அக்.27-தமிழகத்தின் பல்வேறு கிராமப் பகுதிகளில் வீடுகளுக்கு இடையே நிலவும் சாதாரணப் பாதைக் கோளாறுகள் மற்றும் கழிவுநீர் தேங்கும் விவகாரங்கள் சில நேரங்களில் விபரீதமான பாதையில் சென்று கொலை வரை முடிவடைந்து விடுவது சமூகத்தில் பெரும் வேதனையை ஏற்படுத்தி வருகிறது.அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்கோவில்குளம் பகுதியில் வீட்டின் முன்பு கழிவுநீர் செல்வது தொடர்பாக இரு தரப்பினரிடையே நீண்ட நாட்களாக நிலவி வந்த முன்விரோதம், தற்போது ஒரு கல்லூரி மாணவனின் உயிரைப் பறித்துள்ள…
