புதுக்கோட்டை, நவ. 19-
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு போக்குவரத்துக் கழகத்தில் இருந்து தீபாவளி பண்டிகையின் போது தமிழக வெற்றிப் பயணப் பேருந்துகளில் கட்டணம் வசூல் செய்ததாக புகார் எழுந்தது.
இது குறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள், வழித்தட
ங்களில் ஓட்டப்படும் பேருந்துகள் பயண தூரம் மற்றும் நேரம் முடிந்த பிறகு பொதுமக்கள் நலன் கருதி பண்டிகை கால சிறப்பு பேருந்துகளாக இயக்கப்பட்டதால் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இது வழக்கமான நடைமுறை தான் என்று விளக்கம் கொடுத்திருந்தனர்.
இந்த தகவல்கள் பத்திரிக்கைகளில் செய்தியாக வெளியான நிலையில் அரசு போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள் ஆலங்குடி அரசுப் போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் முத்துராமன், இயக்கக மேலாளர் தில்லைராஜன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்தும் அந்த பேருந்தில் பணியில் இருந்த தற்காலிக நடத்துநர் பராசக்தியை பணி நீக்கமும் செய்துள்ளனர். இந்த நடவடிக்கை அரசு போக்குவரத்துக் கழக சங்கங்கள், பணியாளர்களிடையே கடும் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அவர்கள் கூறும் போது, ‘பண்டிகை காலங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கி கட்டணம் வசூல் செய்ய உத்தரவிடுவது உயர் அதிகாரிகள் தான். இதனால் பண்டிகை நாட்களைக் கூட மறந்து சிறப்பு பேருந்துகளை இயக்கி வசூல் கொடுக்கி
றோம். பணியாளர்கள் பற்றாக்குறையால் தற்காலிக பணியாளர்க
ளையும் வைத்து பேருந்துகள் இயக்கப்பட்டது. அதிகாரிகள் உத்தரவு
ப்படியே கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்த சம்பவம் பத்திரிக்கைகளில் செய்தியானதால் ஆலங்குடி கிளை மேலாளர் மற்றும் இயக்கக மேலாளரை பணியிடை நீக்கமும், தற்காலிகப் பணியாளரை பணி நீக்கம் செய்திருப்பது அதிருப்தியாகவும் பணி செய்ய அச்சமாகவும் உள்ளது. கிளை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்த உயர் அதிகாரிகள் கட்டணம் வசூல் செய்ய உத்தரவிட்ட உயர் அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்’ என்று கேள்வி எழுப்புகின்ற
னர்.
வெற்றிப் பயண பேருந்தில் கட்டணம் வசூல்;உத்தரவிட்ட அதிகாரி மீது என்ன நடவடிக்கை என கேள்வி?
