வைகோ போன்ற மூத்த தலைவருக்கு இது அழகல்ல- சண்முகம்

சென்னை, நவ. 12-
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, ‘ஆளும் கட்சியுடன் கூட்டணியில் உள்ள இரண்டு கட்சிகளின் தலைவர்கள் தினமும், முதல்வர் விஜய் தலைமை
யிலான ஆட்சியைக் குறை சொல்வதி
லேயே குறியாக இருக்கிறார்கள்.
அதுவும், அமைச்சர
வையில் இருந்துகொண்டே ஆளும் கட்சியைக் குறை சொல்கிறார்கள். பொழுது விடிந்தால் போதும், ஆளும் கட்சியைக் குறை சொல்லாமல் அவர்கள் சாப்பிடுவதில்லை’ என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், ‘சுட்டிக்காட்டும் குறைகளில் எது சரி, தவறு என சொல்லலாம். ஆனால் ஏன் கேள்வி கேட்கிறீர்கள்? என கேட்பது வைகோ போன்ற மூத்த தலைவருக்கு பொருத்தம் அல்ல’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பதிலளித்து
ள்ளார்.
வைகோ பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு பதிலளித்த பெ.சண்முகம், ‘அது ம.தி.மு.க-வின் அரசியல் அணுகுமுறையாக இருக்கலாம். எங்களைப் பொறுத்தவரை, அவர்கள் மக்களுக்குச் சாதகமான திட்டங்களைத் தீட்டினால், நிறைவேற்றினால் வரவேற்போம். மக்களுக்கு எதிரானது என்றால் வெளிப்படையாகப் பளிச்சென்று எங்களது கருத்துகளைத் தெரிவிப்போம். இது கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடு.
ம.தி.மு.க என்ன நிலைப்பாடு எடுக்கிறதோ, அதையே நாங்களும் எடுக்க வேண்டும் என்று நினைத்தால் அது அவருடைய தவறு. நாங்கள் எழுப்பும் பிரச்சினைகளில் எது சரி, எது தவறு என்று சுட்டிக்காட்டினால் விளக்கங்களை அளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். நாங்கள் சுட்டிக்காட்டும் குறைகளில் எது சரி, தவறு என சொல்லலாம். ஆனால் ஏன் கேள்வி கேட்கிறீர்கள்? என கேட்பது வைகோ போன்ற மூத்த தலைவருக்கு பொருத்தம் அல்ல” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *