சென்னை, அக். 28-
செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பு மற்றும் தரவு மையங்களில் பெரும் முதலீடுகளை மேற்கொண்டு வரும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம், செலவுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கனடா ஆகிய நாடுகளில் உள்ள சுமார் 60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்துள்ளது. இது அதன் மொத்த பணியாளர்களில் கால் பகுதிக்கும் அதிகமானோரை கவர்வதாக கூறப்படுகிறது. லெவல் 70 மற்றும் அதற்கு கீழுள்ள தகுதியான பணியாளர்களுக்கு இந்த திட்டம் பொருந்தும் எனவும், எக்ஸ்பாக்ஸ், விண்டோஸ், மனித வளம் மற்றும் நிதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் இதில் அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு துறையில் செய்யப்பட்டுள்ள நூறு பில்லியன் கணக்கான டாலர் முதலீடுகளுக்கு லாபம் வருமா என்ற முதலீட்டாளர்களின் கேள்விகளுக்கு மத்தியில், நிறுவனம் தனது செலவினங்களை குறைக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்த விருப்ப ஓய்வுத் திட்டம் மூலம் பணியாளர்கள் தாமாக முன்வந்து விலக நிறுவனத்திடமிருந்து ஆதரவு வழங்கப்படுகிறது. ஏற்கெனவே இந்த ஆண்டு தொடக்கத்தில் சுமார் 9,000 ஊழியர்களுக்கு இவ்வாறான திட்டமும், ஜூலை மாதத்தில் 4,800 வேலைவாய்ப்பு குறைப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இந்த அதிரடி அறிவிப்பு உலகளாவிய தொழில்நுட்பத் துறை வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்த மைக்ரோசாப்ட்: 60,000 ஊழியர்களை வெளியேற்ற திட்டமா?
