மதுரை, நவ.13-
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகாவைச் சேர்ந்த கல்வேலிப்பட்டி கிராமத்தில் சமயசெல்வன் என்பவரது இடத்தின் அருகில் கருப்பசாமி என்பவர் வாடிப்பட்டி தாசில்தார் சுந்தரை கையில் வைத்துக்கொண்டு வாடிப்பட்டி மற்றும் அலங்காநல்லூர் பகுதியில் உள்ள மலைக்கிராமங்களில் உள்ள பல லட்சக்கணக்கில் மதிப்பிலான அரசு நிலத்தை வாடிப்பட்டி தாசில்தார் சுந்தர் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு உண்மையான தனியார் நிலத்தின் அருகில் உள்ள அரசு நிலத்தை சேர்த்து பல மோசடிகள் நிறைவேறி வருகிறது.
இந்த விவரம் குறித்து மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் கல்வேலிப்பட்டி கிராமத்தில் சர்வே எண். 220/2B-ல் உள்ள இடத்திற்கு கிழக்கு பக்கம் உள்ள சர்வே எண்.220/4A1, அரசுக்கு சொந்தமான இடமாகும். இந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக 14-10-2026 திங்கட்கிழமை மனுநீதிநாள் அன்று கடிதம் மூலம் மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்பட்டது. அந்த கடிதம் வாடிப்பட்டி தாசில்தார் சுந்தருக்கு நேரடியாகவும், மாவட்ட ஆட்சியர் இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படியும் உத்தரவிட்டார். ஆனால் வாடிப்பட்டி தாசில்தார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.
மீண்டும் மாவட்ட ஆட்சியரிடம் நினைவூட்டியும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். ஆனால் வாடிப்பட்டி தாசில்தார் இன்னும் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். அங்கே விசாரித்தபோது தாலுகா அலுவலகத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த கருப்பசாமியிடம் கையூட்டு பெற்று மேற்படி சர்வே இடத்தை “உனக்கு பட்டா போட்டு தருகிறோம்” எனக்கூறி பல லட்ச ரூபாய் கை மாறியதாக தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் புலம்புகிறார்கள்.
தற்போது பணியில் உள்ள தாசில்தார் வந்தபிறகு தான் அரசு நிலம் தனியாருக்கு தாரை வார்த்துக்கொடுப்பது அதிகரித்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறினார்கள்.
வாடிப்பட்டி தாலுகாவில் அரசு நிலங்கள் அபகரிப்பு :தாசில்தார் சுந்தர் உடந்தைகலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?
