சென்னை, நவ.3-
‘அர்னாப்’ புயலைத் தொடர்ந்து தற்போது ‘முரசு’ புயல் ஆந்திராவை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே, அர்னாப் புயலால் 4,000 கோடிக்கும் மேலாக இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தற்போது உருவாகியுள்ள முரசு புயலால், ஆந்திராவில் மிக மோசமான சேதம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, இந்த புயலால் ஏற்படும் பாதிப்புகளை முடிந்தளவு குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆந்திர முதல்வர் சந்திரபாபு மேற்கொண்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக, தமிழக முதல்வர் விஜயிடம் உதவி கோரியுள்ளார். நேற்று (01-11-26) தமிழக முதல்வர் விஜயுடன் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசிய அந்திர முதல்வர் சந்திரபாபு, முரசு புயலால் ஆந்திராவில் மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், பலத்த காற்றும் வீசும் என்பதால் ஏராளமான மின் கம்பங்கள் சாய்ந்துவிட வாய்ப்பு இருக்கிறது. இதனால், புயல் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில் மின் விநியோக கட்டமைப்பில் கடுமையான பாதிப்புகள் ஏற்படக் கூடும்.
எனவே, மின் விநியோக கட்டமைப்பு பணிகளை விரைந்து சரிசெய்ய, சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்குத் தமிழகத்திலிருந்து மின்துறை பணியாளர்கள் மற்றும் இயந்திரங்களை அனுப்பி வைத்து உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட முதல்வர் விஜய், மின் கட்டமைப்புகளைச் சீரமைக்க உரிய உதவிகளைச் செய்து தருவதாக உறுதியளித்துள்ளார் என, ஆந்திர முதல்வர் சந்திரபாபு தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
“முரசு புயல் பாதிப்பு”; முதல்வர் விஜயிடம் உதவி கோரிய ஆந்திர அரசு
