மதுரை, அக். 28-
குறைந்த விலையில் ஜெனரிக், இதர மருந்துகள் கிடைக்கும் வகையில் தமிழக அரசால் தொடங்கப்பட்ட முதல்வர் மருந்தங்களுக்கு மாத்திரைகள் வழங்காததால் மூடுவிழாவை நோக்கிச் செல்கின்றன. மருந்தக உரிமையாளர்கள் கூறியதாவது:-
மருந்தகம் துவங்கிய நேரத்தில் கூட்டுறவுத்துறை மூலம் அனைத்து மருந்துகள், மருத்துவ கருவிகள் முழுமையாக வழங்கப்பட்டன.ஒரு அட்டை (ஸ்ட்ரிப்) மாத்திரை விற்றால் 80 காசுகள் தான் கிடைக்கிறது. கடந்த சில மாதங்களாக இதயநோய், சர்க்கரை நோய், ரத்த அழுத்தத்திற்கான மருந்துகளை வழங்கவே இல்லை. காலாவதி ஆவதற்கு சில மாதங்கள் முன்பாக உள்ள மாத்திரைகளைத் தருவதால் விற்காமல் நஷ்டம் ஏற்படுகிறது. தற்போது அத்தியாவசிய மாத்திரைகள் இருப்பில் இல்லாததால் வாடிக்கையாளர்கள் மாறுகின்றனர்.
குறைந்தது 100 மருந்தகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. அப்போதைய முதல்வர் ஸ்டாலின் போட்டோவுடன் கூடிய கடையின் பேனரை முதல்வர் விஜய் போட்டோவுடன் மாற்றச் சொல்லி த.வெ.க., தொண்டர்கள் தொல்லை தருகின்றனர். வருமானம் இல்லாத நிலையில் இதுவும் பிரச்னையாக உள்ளது. கூட்டுறவுத்துறையினர் மருந்துகளை சீராக வழங்கி வாழ்வாதாரத்தை சரிசெய்ய வேண்டும் என்றனர்.
முதல்வர் மருந்தகங்கள் மூடப்படும் அபாயம்
