மதுரை, நவ. 3-
மதுரையில் மின்சார வாகனங்களுக்கான ஐந்தாண்டு செயல்திட்டம் தயாரிக்கும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக களம் இறங்கியுள்ளது. முதற்கட்டமாக நகரின் முக்கிய இடங்களில் சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்கப்படவுள்ளன.
தமிழக மின்சார வாகன கொள்கை – 2023ன் கீழ் தேர்வு செய்யப்பட்ட 6 நகரங்களில் மதுரையும் ஒன்று. இதற்காக மாநக
ராட்சி கமிஷனர் தலைமை
யில் ‘நகர மின்சார வாகனப் பிரிவு’ கடந்த பிப்ரவரியில் அமைக்கப்பட்டது. இந்நிலையில் மதுரையில் மின்வாகனங்களுக்கான ஐந்தாண்டு செயல்திட்டம் தயாரிக்க, போக்குவரத்து, நெடுஞ்சாலை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் மாநகராட்சி நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.
இதுபற்றிய விழிப்புண
ர்வுக்காக பயிலரங்கு நடந்தது. இதில் மாநகராட்சி கமிஷனர் கவுரவ்குமார் பேசியதாவது: மதுரை நகருக்கான எதிர்காலம் இப்போதே தொடங்கி விட்டது. மின்வாகன போக்குவரத்துக்கு மாறுவதற்கு அனைத்துப் பங்குதாரர்களின் (ஸ்டேக் ஹோல்டர்ஸ்) ஒருங்கி
ணைந்த முயற்சியும் அவசியம்.
இத்திட்டத்தில் மாநகராட்சிக்குள் பொருத்தமான பொது இடங்களில் சார்ஜிங் ஸ்டேஷன்களுக்கான கட்டமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகளை மாநகராட்சியே மேற்கொள்ளும். மதுரை முழுவதும் மின்சார வாகனப் பயன்பாட்டை எளிதாக்க அனைத்துத் துறைகளும் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம்’ என்றார்.
சார்ஜி்ங் ஸ்டேஷன்கள், நகரின் மின்சார வாகன கட்டமைப்பு போன்றவற்றின் மீதான தாக்கத்தை ஆய்வு செய்து, தெளிவான காலக்கெடுவுடன் பணிகளை தொடங்குவது அவசியம். வெற்றி தொலை நோக்கு திட்டப்படி தமிழகத்தில் 2031 க்குள் 20 ஆயிரம் சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்க வேண்டும் என்ற அரசின் இலக்கை அடைய இத்திட்டம் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரை மாநகராட்சி பகுதிக்குள் பொருத்தமானஇடங்களில் சார்ஜிங் ஸ்டேஷன்கள்
