மதுரை, அக். 20-
மதுரை தமுக்கம் மைதானத்தில் விருதுநகரை தலைமையிடமாகக் கொண்டு 17 வருடங்களாக சேவை மனப்பான்மையுடன் இயங்கி வரும் மரகத தையல் பயிற்சி பள்ளி சார்பாக தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. திரைப்பட நடிகை ஷகிலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கெளரவித்தார்.
‘தொடர்ந்து பேட்டி யளித்த மரகத தையல் பயிற்சி நிறுவனர் செல்வகுமார் பெண்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்று உயர வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் இந்த பயிற்சி
பள்ளி கடந்த 17 ஆண்டுகளாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதுவரை ஆயிரக்கணக்கான பெண்கள் இங்கு பயிற்சி பெற்று சொந்தமாக தொழில் துவங்கியும், வேலைவாய்ப்பு பெற்றும் பயனடைந்துள்ளனர். இந்த தையல் பயிற்சி பள்ளியின் மிகப்பெரிய சிறப்பு, கட்டணம் என்ற பெயரில் பெரிய தொகை எதுவும் வசூலிக்கப்படுவ தில்லை. வெறும் ஒரு ரூபாய் செலுத்தினால் போதும், தையல் தொழிலுக்குத் தேவையான அனைத்து விதமான நவீன பயிற்சிகளும் முழுமையாக கற்றுத்தரப்படுகிறது. அடிப்படை தையல் முதல் டிசைனர் பிளவுஸ், சுடிதார் வரைதையல் இயந்திரத்தை இயக்குவது முதல் துணி வெட்டுவது வரை
சுய தொழில் துவங்குவதற்கான வழிகாட்டுதல் உட்பட அனைத்து பயிற்சிகளும் அனுபவம் வாய்ந்த ஆசிரி யர்களால் வழங்கப்படுகிறது என்றார் இந்த விழாவில், பயிற்சியை வெற்றிகரமாக முடித்த மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தங்களது வாழ்வில் புதிய அத்தியா யத்தை தொடங்கும் மாணவிகள் மகிழ்ச்சியுடன் சான்றிதழ்களை பெற்றுக்கொண்டனர்.
17 வருடங்களாக தொடர்ந்து பெண்களின் முன்னேற்றத்திற்காக உழைத்து வரும் மரகத தையல் பயிற்சி பள்ளியின் நிறுவனர் மற்றும் ஆசிரியர்களுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்தனர்.
மதுரை தமுக்கம் மைதானத்தில் மரகத தையல் பயிற்சி பள்ளி சான்றிதழ் வழங்கும் விழாவெறும் ஒரு ரூபாயில் பெண்களுக்கு வாழ்வாதாரம்
