மதுரை, அக். 20-
தெற்கு ரயில்வேயில் முதல்முறை யாக கண் ணாடிக் கூரை கொண்ட ‘விஸ்டாடோம்’ பெட்டி அக்.22 முதல் மதுரை குருவாயூர் விரைவு ரயிலில் இணைத்து இயக்கப்பட உள்ளது.
சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற் சாலையில் (ஐசிஎஃப்) சுற் றுலாப் பயணிகளை கவரும் விதமாக, கடந்த 2017-ம் ஆண்டு முதல் எல்எச்பி, ‘விஸ்டாடோம்’ சுற்றுலா ரயில் பெட்டிகள் தயாரிக் கப்படுகின்றன. இந்நிலை யில், தெற்கு ரயில்வேயில் முதல்முறையாக, மதுரை குருவாயூர் விரைவு ரயி லில் அக்.22-ம் தேதி முதல் ஜன.15-ம் தேதி வரை கண் ணாடிக் கூரை கொண்ட ‘விஸ்டாடோம்’ பெட்டி பயன்பாட்டுக்கு வர உள்
ளது.
இதுகுறித்து தெற்கு ரயில் வே அதிகாரிகள் கூறியதாவது: அழகிய மலைப் பகுதிகள், அருவி கள் போன்ற இயற்கை அழகுகளை பயணிகள் முழுமையாக கண்டு ரசிக் கும் வ கையில் விஸ் டாடோம் பெட்டி வடிவ மைக்கப்பட்டுள்ளது.
இந்த பெட்டியில் பெரிய கண் ணா டி ஜன் னல் களோடு, சுழலும் இருக் கைகள் இருப்பதால் 360 டிகிரி கோணத்தில் இயற் கையை ரசிக்க முடியும். ஒரு பெட்டியில் 44 இருக்கைகள் மட்டுமே இருக் கும். வைஃபை, ஜிபிஎஸ், உள் ளிட்ட தொழில்நுட்ப வசதி களும் இதில் உண்டு. ரூ.4 கோடி செலவில் இப் பெட்டி உருவாக்கப்பட்டுள்
ளது.
தெற்கு ரயில்வேயில் முதல்முறையாக, மதுரை -குருவாயூர் விரைவு ரயி லில் (16327) அக்.22-ம் தேதி முதல் விஸ்டாடோம் பெட் டி, பயணிகளின் பயன்பாட் டுக்கு வருகிறது. இது ஜன.15-ம் தேதி வரை 4 மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் இயக்கப் படும்.வாரத்தில் 4 நாட்கள் (வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு) இப் பெட்டி
இணைத்து இயக்கப்படும். மறு மார்க்கத்தில் (குரு வாயூர் – மதுரை) அக்.23-ம் தேதி முதல் ஜன. 16-ம் தேதி வரை அமலில் இருக் கும். இதுவாரத்தில் 4 நாட் கள் (வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள்) பெட்டி இணைத்து இயக்கப்படும்.
தமிழகம் – கேரளா எல் லையான செங்கோட்டை புனலூர் மலைப்பாதை,
ஆரியங்காவு கணவாய் வழி யாகச் செல்லும்போது, மேற்குத் தொடர்ச்சி மலை யின் அழகிய இயற்கைக் காட்சிகளை ரசிக்கலாம். இந்த பெட்டியில் அடிப் படைக் கட்டணம் ரூ.515-ல் இருந்து தொடங்குகிறது. மதுரையில் இருந்து குரு வாயூர் வரை முழுமை யாகப் பயணிப்பதற்கான மொத்தக் கட்டணம் ரூ.1,875 ஆகும். இவ்வாறு அதிகாரி கள் தெரிவித்தனர்.
மதுரை-குருவாயூர் விரைவு ரயிலில் அக்.22 முதல் ரூ.4 கோடி செலவில் தயாரான ‘விஸ்டாடோம்’ பெட்டி இணைப்பு
