பெண் மேயர் என்றும் பாராமல் என்னை இழிவுப்படுத்துவது தான் த.வெ.க-வின் வியூகமா?

சென்னை, அக். 22-
சென்னை மாநகர மேயர் பிரியா, த.வெ.க-வினருக்கு எதிராக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தி
லும், தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவிலும் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதாவது, ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி த.வெ.க-வினர் தன்னை பற்றி ஆபாசமாக பதிவு வெளியிடுவதாகவும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ‘2022-ம் ஆண்டு நான் மேயராகப் பொறுப்பேற்றேன். கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் எனக்கு மேயராகப் பணியாற்றும் வாய்ப்பை அளித்தார்கள். கடந்த 4 ஆண்டுகளாக மேயர் என்ற முறையிலும், ஒரு பெண் என்ற முறையிலும் எனக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தார்கள். அன்றைக்கு முதலமைச்சராக இருந்து, இன்றைக்குக் கழகத் தலைவராக இருக்கக்கூடிய எங்கள் தலைவர், ஒவ்வொரு அரசு நிகழ்ச்சியிலும், மாநகராட்சி நிகழ்ச்சியிலும் முதலமைச்சருக்கான இருக்கைக்கு அருகிலேயே எனக்கு இருக்கை அளித்தார்கள்.
ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தன் அருகில் என்னை நிற்க வைத்து, ஒரு பெண்ணாகவும் மேயராகவும் என்னுடைய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார்கள். இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அண்ணன், ஒரு சகோதரிக்கு எந்தெந்த வகையில் எல்லாம் வழிகாட்ட முடியுமோ, அந்த வகையில் எல்லாம் ஓர் அண்ணனாக இருந்து கடந்த 4 ஆண்டுகளாக எனக்குத் துணையாக இருந்தார்கள்.
ஆனால், இன்றைக்கு ஆட்சி அமைத்திருக்கக்கூடிய த.வெ.க அரசு, மே மாதம் முதலே மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு பணிகளை ரத்து செய்திருக்கிறது. சில பணிகளை நிறுத்தி வைத்திருக்கிறது. மாநகராட்சிக்கு ஒதுக்க வேண்டிய நிதியையும் ஒதுக்கவில்லை. இதுகுறித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பல்வேறு இடங்களில் எங்களுடைய கண்டனங்களைப் பதிவு செய்திருக்கிறோம்.
இதையும் தாண்டி, இன்றைக்கு விர்ச்சுவல் வாரியர்ஸ் என்று சொல்லக்கூடிய விர்ச்சுவல் அப்யூசர்ஸ், சமூக வலைத்தளங்களில் என்னைத் தவறாகச் சித்தரித்து வருகிறார்கள். இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில், நான் எந்த மேடையில் த.வெ.க அரசைக் கண்டித்துப் பேசினாலும், அந்த அரசில் நடைபெறும் நிர்வாகச் சீர்கேடுகளை விமர்சித்தா
லும், அதற்கு மறுநாளே என்னைத் தவறாகச் சித்தரித்து வீடியோக்களை வெளியிடுகிறார்கள்.
ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வீடியோக்களை எடிட் செய்து, எங்கள் கழகத்தில் இருக்கக்கூடிய
வர்களுடன் என்னைத் தவறாகத் தொடர்புபடுத்தி வீடியோக்களை வெளியிடுகிறார்கள். இந்த மாதிரியான வீடியோக்கள் பொதுமக்களிடையே பரவும்போது என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தேன். ஆனால், இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இன்றைக்கும் மீண்டும் என்னை மிகவும் தவறாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருக்கிறார்கள். இதுகுறித்தும் இன்று புகார் அளித்திருக்கிறேன். இதற்காவது இன்றைக்கு ஆட்சியில் இருக்கக்கூடிய த.வெ.க அரசு நடவடிக்கை எடுக்குமா என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படும், பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றெல்லாம் பேசினார்கள்.
ஆனால், ஒரு மேயராகவும் பெண்ணாகவும் நான் பலமுறை இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் பேசியும், இன்றுவரை முதலமைச்சர் மௌனம் காத்து வருகிறார்.
இதற்கு எப்போது பதில் கிடைக்கும் என்ற கேள்வியை இந்த இடத்தில் முன்வைக்கிறேன். எங்களுடைய கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தபோது, பெண்களின் முன்னேற்றத்துக்கான ஆட்சியை நடத்தினார்கள். கடந்த ஆண்டுகளில் பெண்களின் வளர்ச்சிக்காகப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். அதன் மூலம் எத்தனையோ பெண்கள் பயனடைந்திருக்கி
றார்கள்.
ஆனால், இன்றைக்கு ஆட்சி அமைத்திருக்கக்கூடிய
வர்கள் பெண்களின் பாதுகாப்பைப் பற்றிப் பேசிக்கொண்டே, தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழலை உருவாக்கியிருக்கிறார்கள். அவர்களுடைய விர்ச்சுவல் வாரியர்ஸ் மூலமாக பெண்களைத் தவறாகச் சித்தரிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுதான் த.வெ.க அரசின் வியூகமா என்ற கேள்வியை எழுப்புகிறேன் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *