பிளாட்பார்ம் டிக்கெட் வாங்கும் மக்களுக்கு இலவச வசதிகள் வழங்காதது ஏன்?

மதுரை, நவ. 13-
தஞ்சாவூரைச் சேர்ந்த விமலநாதன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தி
ருந்தார். அந்த மனுவில், ரயில் நிலையங்களில் பிளாட்பாரங்களில் போதிய வசதிகள் இல்லாமல் பயணிகள் தவிப்பதாகக் குறிப்பிட்டி
ருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசார
ணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களுக்குக் கட்டணம் வசூலிக்கின்றனர். ரயில் நிலையங்களில் பயணிகளுக்குப் பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம்வசூலிக்கின்றனர். ஆனால், பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் எதையும் இலவசமாகச் செய்யாமல் இருப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பினர். மேலும், திருச்சி, மதுரை மண்டலங்களுக்கு உட்பட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் ஆறு மாதங்களில் பேட்டரி கார் வசதி ஏற்படுத்த வேண்டும் எனவும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *