பசும்பொன்னுக்கு முதல்வர் விஜய் வருகை:பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

கமுதி, அக். 24-
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் குருபூஜை விழாவில் தமிழக முதல்வா் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அங்குள்ள ஹெலிபேடு தளம் வரை இரும்புக் கம்பிளால் தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள பசும்பொன்னில் வருகிற 30-ஆம் தேதி சுதந்திரபோராட்ட வீரா் முத்துராமலிங்கத் தேவரின் 119-ஆவது ஜெயந்தி விழா, 64-ஆவது குருபூஜை விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்க தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் பசும்பொன்னுக்கு வருகை தர உள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியானது. துணை குடியரசுத் தலைவா், தமிழக முதல்வா் உள்ளிட்ட முக்கிய தலைவா்கள் வந்தால் மட்டுமே அங்குள்ள ஹெலிபேடு தளம் சீரமைக்கப்பட்டு, பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த நிலையில் தேவா் நினைவிடத்திலிருந்து பசும்பொன்னில் உள்ள ஹெலிபேடு தளம் வரை இரும்புக் கம்பிகளால் தடுமப்புகள் அமைக்கும் பணி, பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *