நீதிமன்றத்தில் சந்திப்போம்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு திமுக பரந்தாமன் சவால்

சென்னை, நவ. 20-
பரபரப்பான தமிழக அரசியல் சூழலில், தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், அக்கட்சியின் சட்டத்துறை இணைச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பரந்தாமன் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து வருகிறார்.
அப்போது அவர் த.வெ.க. அரசின் செயல்பாட்டைக் கடுமையாக விமர்சித்துப் பேட்டியளித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு எதிராக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வக்கீல் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், ‘கடந்த 09.11.2026 அன்று சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், நேரலையாக ஒளிபரப்பப்பட்ட நிகழ்வில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராகத் தாங்கள் தனிப்பட்ட முறையில் சுமத்திய குறிப்பிட்ட மற்றும் பொய்யான குற்றச்சாட்டு
களின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. எனவே அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் நற்பெயருக்கு ஏற்பட்ட களங்கத்திற்கான இழப்பீடாக ரூ. 1,00,00,000/- (ரூபாய் ஒரு கோடி மட்டும்) தொகையை வழங்க வேண்டும்.
இந்த கோரிக்கை
களுக்குத் தாங்கள் இணங்கத் தவறினால், தகுந்த நிவாரணம் மற்றும் தீர்வுகளுக்காகத் தங்களுக்கு எதிராகத் தகுந்த உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடர அமைச்சர் ஆதவ் ஆர்ஜூனா நிர்ப்பந்திக்க
ப்படுவார் என்பதையும், அதற்கான செலவுகள் மற்றும் விளைவுகளுக்குத் தாங்களே பொறுப்பாவீர்கள் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டு
ள்ளது.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பரந்தாமன் எக்ஸ் சமூக வலைத்தளத்தில், ‘நோட்டீஸ் அனுப்பி வழக்கு போடுவேனு சொன்னா பயந்திடுவேன், பிரஸ் மீட் பண்ணமாட்டேன்னு நினைக்கிறீங்களா மாண்புமிகு ஆதவ் ஆர்ஜூனா அவர்களே!. வழக்கெல்லாம் வழக்கம்போல நாங்க நீதிமன்றத்துல சந்திப்போம். பிரச்சனைக்கு பதில் சொல்லாம நோட்டீஸ் விடுரது கேஸ் போட்டுடு வேன்னு மிரட்ரது இப்படி பண்ணா எனக்கு உங்கள, உங்க கட்சியை, உங்க ஆட்சியை பார்த்தா சிரிப்பு தான் வருது. எனக்கு இந்த நேரத்துல ஒரு டயலாக் ( Dialogue) தான் நினைவுக்கு வருது.. என்ன நீங்க பயந்துட்டீங்களா குமாரு?’ எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *