சென்னை, நவ. 25-
சென்னையில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்த இசையமைப்பாளர் அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிதான் இப்போது கோலிவுட் முதல் அரசியல் வட்டாரம் வரை ‘டாக் ஆஃப் தி டவுன்’.
திரையுலகின் உச்ச நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள், அரசியல் விஐபிக்கள் எனப் பலரும் படையெடுத்த இந்த பிரம்மாண்ட விழாவில், நடிகை த்ரிஷா மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோர் கலந்துகொள்ளாததுதான் இப்போது சமூக வலைதளங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
அனிருத் – காவ்யா மாறன் ரிசப்ஷனுக்கு நடிகை த்ரிஷாவுக்கு முறையாக அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருந்தது. புதுமணத் தம்பதிகளை நேரில் சென்று வாழ்த்த வேண்டும் என்ற ஆர்வத்தில்தான் த்ரிஷாவும் இருந்தாராம். ஆனால், நிகழ்ச்சிக்குச் சற்று முன்பாக, “ரிசப்ஷனுக்கு வர வேண்டாம்” என விஜயின் மேனேஜர் ஜெகதீஷிடம் இருந்து இன்ஸ்ட்ரக்ஷன் வந்ததாகக் கூறப்படுகிறது. முதலில் அதை த்ரிஷா பெரிதாக எடுத்துக்கொள்ள
வில்லையாம். ஆனால், அதன் பிறகும் விஜயிடம் இருந்தே நேரடியாக வந்த அழுத்தமே த்ரிஷாவை ரிசப்ஷனுக்கு வரவிடாமல் தடுத்து நிறுத்திவிட்டதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
சமீபகாலமாகத் தமிழக அரசியலிலும், சினிமா வட்டாரத்திலும் த்ரிஷாவைச் சுற்றிச் சுழலும் சில கிசுகிசுக்களும், சர்ச்சைகளுமே இந்தத் தடைக்குக் காரணம் என்கிறார்கள். குறிப்பாக, ரிசப்ஷனில் சில முக்கிய விஐபிக்கள் கலந்துகொள்ள இருந்ததாலும், சங்கீதா வரும்போது, த்ரிசாவும் வந்தால், தேவையில்லாத சலசலப்புகளையோ அல்லது சங்கடமான சந்திப்புகளையோ தவிர்க்கவே மேலிடத்தி
லிருந்து இந்த ‘கட்’ போட
ப்பட்டதாகப் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
இன்னொரு பக்கம், அனிருத்தின் சினிமா என்ட்ரிக்கு முக்கியக் காரணமாக இருந்தவரும், டி அண்டு அ (தனுஷ் & அனிருத்) என ரசிகர்களால் கொண்டா
டப்பட்டவருமான நடிகர் தனுஷும் இந்த ரிசப்ஷனில் தலைகாட்டாதது பல யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது. சரியாக ரிசப்ஷன் நடந்த அதே நாளில், தனது அடுத்த படத்தின் படப்பிடிப்புக்காக மதுரைக்குப் பறந்த தனுஷ், அங்கு சில நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார்.
தனுஷ் மற்றும் அனிருத் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே முன்பு போல் சுமூகமான நட்பு இல்லை என்றும், இடையில் சில படங்களில் இணைந்து பணியாற்றினாலும் இருவருக்குள்ளும் ஒருவித இடைவெளி நீடிப்பதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, இந்தத் திருமணத்தில் பங்கேற்கும் சில முக்கியப் புள்ளிகளுடனான தொழில் ரீதியான, தனிப்பட்ட முரண்பாடுகளும் தனுஷ் இந்த விழாவைத் தவிர்க்கக் காரணமாக இருக்கலாம் என தகவல்கள் தீயாகப் பரவி வருகின்றன.
மொத்தத்தில், அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பு ஒரு பக்கம் கோலாகலமாக நடந்தாலும், த்ரிஷாவுக்குப் போடப்பட்ட ‘தடை’ மற்றும் தனுஷின் ‘புறக்கணிப்பு’ ஆகிய இரண்டு விஷயங்கள்தான் இப்போது இணையத்தில் ஹாட் டாபிக்காக ஓடிக்கொண்டி
ருக்கின்றன.
த்ரிஷாவுக்கு தடைபோட்ட விஜய்:அனிருத் ரிஷப்சனில் நடந்த பகீர் பின்னணி
