தேவர் குருபூஜைக்கு முதலமைச்சர் வருவாரா?அமைச்சர் ராஜீவ் சொன்ன தகவல்

கமுதி, அக். 23-
கமுதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு முதல்வர் விஜய் வருகை உறுதிப்படுத்தப்படவில்லை என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ் தகவல் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 119-வது ஜெயந்தி மற்றும் 64-வது குருபூஜை விழா வரும் அக்டோபர் 28, 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இவ்விழாவில் பல்வேறு அரசியல் கட்சியினர் பொதுமக்கள் அவரது நினைவிடத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துகின்றனர்.
குருபூஜை முன்னேற்பாடு பணிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ் மற்றும் மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன், எஸ்.பி சந்தீஷ் ஆகியோர் தேவர் நினைவிடத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ், பசு
ம்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைக்கு முதல்வர் விஜய் வருகை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் குருபூஜைக்கு வரும் பொதுமக்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் விஐபிகள் வந்து செல்ல புதிய வழித்தடம் உருவாக்கப்ப
ட்டுள்ளது.
அதேபோல குருபூஜைக்கு அன்னதானம் வழங்க அனுமதி கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் உரிய ஆய்வு மேற்கொண்டு அனுமதி வழங்கப்படு
கின்றன என தெரிவித்தார். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சாலி தளபதி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *