கீழடி அகழாய்வு குழிகள் மூடல்

கீழடி, அக். 22-
கீழடி 11ம் கட்ட அகழாய்வில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட பொருட்களை ஆவணப்படு
த்தும் பணி தொடங்கி
யுள்ளது.
ஆய்வு பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் மாலை நேரங்களில் மழை பெய்வதால் அகழாய்வு குழிகள் தார்ப்பாய் போட்டு மூடி வைக்கப்பட்டுள்ளன.
கீழடியில் கஜேந்திரன் என்பவரது ஒன்றரை ஏக்கர் நிலத்தில் கடந்த மார்ச் 15 முதல் அகழாய்வு பணிகள் கீழடி அகழாய்வு தள இயக்குனர் ரமேஷ் தலைமையில் நடந்து வருகிறது.
இதுவரை மொத்தம் 13 குழிகள் தோண்டப்பட்டு கைப்பிடியுடன் கூடிய சுடுமண் பானை, சாய கிண்ணங்கள், ஒரே குழியில் மூன்று வித வடிகால் அமைப்பு, நீர்வழி தடங்கள், சுடுமண் தட்டு, செங்கள் கட்டுமானங்கள், தங்க பொருட்கள், தக்கழி, பாசிகள், பானை ஓடுகள் கண்டறியப்பட்டன. அகழாய்வு பணிகள் ஜனவரியில் தொடங்கி செப்டம்பருடன் முடிவடைவது வழக்கம், இந்தாண்டு எல் நினோ தாக்கம் காரணமாக மழை அறிகுறி இல்லாததால் அக்டோபர் வரை பணிகள் நடந்து வருகின்றன.
முதல் கட்டமாக தோண்டப்பட்ட ஒன்பது குழிகளில் மேலும் அகழாய்வு செய்ய வாய்ப்பில்லை. எனவே அதில் உள்ள பானைகள், சுடுமண் தட்டுகள், உள்ளி
ட்டவற்றை பாதுகாக்க அந்த குழிகளை தொல்லியல் துறையினர் பாதுகாப்பாக தார்ப்பாய் போட்டு மூடி வைத்துள்ளனர்.
புதிதாக தோண்டப்பட்ட நான்கு குழிகளில் மட்டும் அகழாய்வு பணிகள் அடுத்தாண்டு வரை நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *