விருதுநகர், நவ. 22-
மாவட்டத்தில் கார்த்திகை துவங்கியது முதல் அகல் விளக்குகள் விற்பனை மும்மரமாக நடக்கிறது. புதிய டிசைன்களில் வந்துள்ள விளக்குகளை மக்கள் ஆர்வமாக வாங்கி செல்கின்றனர்.
கார்த்திகை தீபத்திருவிழா நவ.24ல் கொண்டாடப்படுவதால் கார்த்திகை அகல் விளக்குள் விற்பனை மும்மரமாக நடக்கிறது. விருதுநகர் மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மதுரை, மானாமதுரை பகுதிகளில் தயாரிக்கப்பட்ட அகல் விளக்குகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்தாண்டு விருதாச்சலம் பகுதியில் தயாரிக்கப்பட்ட புதிய டிசைன் அகல் விளக்குகள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இவற்றில் தாமரை, ரோஜா டிசைன் விளக்குகள், துளசிமாடம், லிங்க வடிவம் உள்பட பல்வேறு டிசைன்களில் ரூ.4 முதல் ரூ. 100 வரை விளக்குகள் விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து வியாபாரி ராதா கிருஷ்ணன் கூறியதாவது:
கடந்தாண்டு இருந்த டிசைன்கள் இல்லாமல் தற்போது புதிய டிசைன்களில் விளக்குகள் வந்துள்ளது. கார்த்திகை துவங்கியது முதல் மக்கள் ஆர்வமாக அகல் விளக்குகளை வாங்கி செல்கின்றனர் என்றார்.
கார்த்திகை அகல் விளக்குகள் விற்பனை மும்மரம்
