‘அர்னாப்’ புயல் நாளை அதிதீவிர புயலாகஆந்திராவில் கரையை கடக்கிறது

சென்னை, அக். 27-
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அது நேற்று அர்னாப் புயலாக உருவாகி உள்ளது. நாளை (28ம் தேதி) பாபட்லா – விசாகப்பட்டினம் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரி
வித்துள்ளது. வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், வங்கக்கடலில் புதிய புயல் உருவாகும் வாய்ப்புள்ளது. மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 5 கி.மீ. வேகத்தில் தென்மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று
ள்ளது.
இந்த வானிலை அமைப்பு 15.1 டிகிரி வடக்கு அட்சரேகை, 91.0 டிகிரி கிழக்கு தீர்க்கரேகைக்கு அருகே மையம் கொண்டிருந்தது. இது அந்தமான் தீவுகளின் ஸ்ரீ விஜயபுரத்துக்கு வடக்கு வடமேற்கே சுமார் 420 கி.மீ. தொலைவிலும், ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்துக்கு கிழக்கு தென்கிழக்கே 870 கி.மீ. தொலைவிலும் நிலவியது. மேலும், காக்கிநாடாவுக்கு கிழக்கு தென்கிழக்கே 960 கி.மீ., மசூலிப்பட்டினத்துக்கு கிழக்கு தென்கிழக்கே 1,060 கி.மீ. மற்றும் பாபட்லாவுக்கு கிழக்கே 1,130 கி.மீ. தொலைவிலும் இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அமைந்திருந்தது.
தற்போது தென்மேற்கு திசையில் நகர்ந்து வரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், தொடர்ந்து அதே திசையில் நகர்ந்து இன்று காலையில் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும். இப் புதிய புயலுக்கு அர்னாப் என பெயரிடப்பட்டுள்ளது. புயல் உருவாகும் சூழல் காரணமாக தமிழகத்தில் கனமழை தொடர்கிறது. சென்னை, கடலூர், நாகப்பட்டினம், காட்டுப்பள்ளி, பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மேற்கு வடமேற்கு திசையில் நகரும் இந்தப் புயல், நாளை காலை மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் தீவிர புயலாக மாற வாய்ப்புள்ளது. தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று, அக்டோபர் 28-ம் தேதி காலை ஆந்திரப் பிரதேச கடற்கரையை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதிக்கு வரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்தப் புயல் அக்டோபர் 28-ம் தேதி முற்பகலில் பாபட்லா – விசாகப்பட்டினம் இடையே ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஏனாம் கடற்கரைகளைக் கடக்க வாய்ப்புள்ளது, அப்போது அது மிகத் தீவிர புயலாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . கரையைக் கடக்கும் நேரத்தில் மணிக்கு 115 முதல் 125 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். சில நேரங்களில் காற்றின் வேகம் மணிக்கு 140 கி.மீ. வரை அதிகரிக்கலாம். இதனால் ஆந்திரப் பிரதேசத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதியிலிருந்து வடக்கு தமிழக கடலோர பகுதிகள் வரை கேரளா வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது இதன் காரணமாக புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்க
ளில் மிக கன மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சுமார் 3.1 கிமீ உயரம் வரை தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதியிலிருந்து வடக்கு தமிழக கடலோர பகுதிகள் வரை கேரளா வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.
மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கன மழையும், ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 முதல் 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
தமிழக கடலோரப்பகுதிகளில் இன்று மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் வட தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெற உள்ளது. இந்நிலையில், வானிலையை கண்காணிக்கும் சென்னை ரேடார் கருவி தொழில்நு
ட்பக் கோளாறால் செயல்படவில்லை என்ற செய்திகள் நேற்று வெளியானது. வடகிழக்கு பருவமழை தீவிரமடை
ந்துள்ள நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரேடார் செயல்படாததால் நிகழ்நேர வானிலை நிலவரத்தைக் கணிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு அலுவலர்கள் கூறுகையில், ‘’சென்னையில் கோட்டை அருகில் ஒன்று, பள்ளிக்கரணையில் ஒன்று என இரண்டு இடங்களில் ரேடார்கள் உள்ளது. இரண்டு ரேடார்களுமே புயலை கண்காணிக்கக் கூடியவைதான். அதில், கோட்டை அருகில் உள்ள ரேடார் மூலம் சுமார் 400 கிலோமீட்டர் வரையில் கண்காணிக்க முடியும். அதேபோல், பள்ளிக்கரணையில் உள்ள ரேடார் மூலம் சுமார் 200 கிலோமீட்டர் வரையில் கண்காணிக்க முடியும். இதில், கோட்டை அருகில் உள்ள ரேடார் 15 ஆண்டுகள் பழமையானது. அதை மாற்றுவதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது;
ரேடார் என்பது புயல், மழை உள்ளிட்ட வானிலை நிகழ்வுகளை கணிக்கப் பயன்படும் கருவி. குறிப்பாக, புயல் எங்கே உள்ளது, எந்த திசையில் நகர்கிறது, அதன் தாக்கம் எவ்வாறு இருக்கும் உள்ளிட்ட நிகழ்வுகளைக் கண்காணிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *