அனிருத் – காவ்யா மாறன் திருமணம்:இரண்டு கோடீஸ்வரர்களின் சங்கமம்

சென்னை, நவ. 12-
அனிருத்தும், காவ்யா மாறனும் தங்கள் திருமணத்துக்காக நேற்று க்ரீஸில் இருக்கிறார்கள். இரண்டு குடும்பத்தினரின் நெருங்கிய உறவினர்களான ரஜினிகாந்த், மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி உள்ளிட்டோர் அதில் பங்கேற்றனர். தென்னிந்தியாவிலேயே அனைவரது கவனத்தை ஈர்த்த பெரிய திருமணமாக இது மாறியிருக்கிறது.
அம்பானி மகன் ஆனந்த் அம்பானி திருமணத்துக்கு பிறகு இந்தியாவில் பலரது கவனத்தை பெற்ற திருமணமாக மாறியிருக்கிறது அனிருத் – காவ்யா மாறன் திருமணம். இரண்டு பேரும் ரகசியமாக செய்து வந்த காதல் வீட்டில் தெரிந்ததை அடுத்து; இரண்டு பேரின் குடும்பமும் ஆழமாக பேசி ஆலோசித்து இந்தத் திருமணத்துக்கு ஒத்துக்கொண்டிருக்கி
றார்கள். இந்த விசேஷம் நடப்பதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பங்கு அதீதமாக இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.
க்ரீஸ் நாட்டில் திருமணம்: திருமண ஏற்பாடுகள் தொடங்கியதை அடுத்து; முதலமைச்சர்கள், பிரதமர், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்களுக்கு எல்லாம் பத்திரிகை வைக்கப்பட்டது. அவர்கள் எல்லாம் சென்னையில் 21ஆம் தேதி நடக்கும் ரிசப்ஷனில் பங்கேற்கவிருக்கிறார்கள். திருமணமோ இரண்டு பேரின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் க்ரீஸ் நாட்டில் நேற்று நடந்தது. அங்கே தனி தீவு ஒன்றில் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன.
படையெடுத்த குடும்பம்: இந்தத் திருமணத்தில் பங்கேற்பதற்காக ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி உள்ளிட்டோர் க்ரீஸ் நாட்டுக்கு சென்றனர். அவர்கள் அனைவரும் எமிரேட்ஸ் விமானத்தில் சந்தோஷத்தோடு பயணப்பட்டதாக விமான நிலையத்திலிருந்து வரும் தகவல்கள் வெளியாகின. அத்தனை ஏற்பாடுகளும் ரிச்சாகவும், பாதுகாப்பாகவும் செய்யப்பட்டிருக்கிறதாம்.
சொத்து மதிப்பு: அனிருத் சினிமாவுக்குள் வருவதற்கு முன்பு அவரது குடும்பம் அப்பர் மிடில் கிளாஸ்தான். காவ்யா மாறனோ பிறக்கும்போதே கோல்டன் ஸ்பூன் குழந்தையாகவே பிறந்தார். இப்போது அனிருத் தலை எடுத்த பிறகு அவரது அப்பர் மிடில் கிளாஸ் குடும்பமும் பணக்கார குடும்பம் ஆகிவிட்டது. ஆக, இரண்டு கோடீஸ்வரர்கள் வாழ்க்கை துணையாக மாறியிருக்கிறார்கள். இந்நிலையில் அவர்களது மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வட்டமடிக்கின்றன.
2 பேரின் மொத்த சொத்து மதிப்பு: அதன்படி அனிருத் ஒரு படத்துக்கு 10 கோடி சம்பளமாக பெறும் அனிருத் மொத்தம் 100 கோடி ரூபாய்வரை சொத்து சேர்த்திருக்கிறாராம். ஏற்கனவே கலாநிதி மாறனுக்கு 26,000 கோடி ரூபாய் வரை சொத்து இருக்கிறதாக கணிக்கப்பட்டிருக்கிறது. காவ்யா மாறனோ தந்தை செய்யும் தொழிலின் அடுத்த முகமாக இருக்கிறார். எனவே இந்த சொத்து முழுக்க அவருக்குத்தான் செல்லும். அதுமட்டுமின்றி ஐபிஎல்லில் ஹைதராபாத் அணியின் உரிமையாளரும் அவர். அதன் மூலம் கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய்வரை சொத்து சேர்த்திருக்கிறாராம். இதையும் சேர்த்தால் காவ்யா மாறனின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 27,000 கோடி ரூபாய்வரை இருக்கும் என்கிறார்கள். இந்தத் திருமணம் உண்மையில் காஸ்ட்லி திருமணம்தான். இனிமேல் அனிருத் தொடர்ந்து இசையமைத்தாலும், மனைவியின் தொழில்களிலும் அவரை பார்க்கலாம் என்றே கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *