வீட்டுக் காவலில் வைத்துள்ள போலீசாரின் நடவடிக்கைக்கு நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்

நெல்லை, நவ. 25-
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் தமிழகத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி
யுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி தீபம் ஏற்ற வலியுறுத்தி திருப்பரங்கு
ன்றம் செல்லத் திட்டமிட்ட பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை போலீசார் வீட்டுக் காவலில் வைத்துள்ளனர்.
அவரது வீட்டை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில், நெல்லை மாவட்டத்தில் பாஜக மற்றும் இந்து முன்னணியைச் சேர்ந்த 480 பேரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் திருக்கார்த்தி
கை நாளன்று தீபம் ஏற்றுவது தொடர்பாக கடந்த சில மாதங்களாகவே சர்ச்சை நீடித்து வருகிறது. இந்த விவகாரத்தில் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து, இன்று திருக்கார்த்திகை தீபத் திருநாளில் திருப்பரங்குன்றம் சென்று தீபம் ஏற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்க பாஜகவினர் திட்டமிட்டனர். குறிப்பாக, மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் இருந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் திருப்பரங்குன்றம் செல்ல ஏற்பாடு செய்திருந்தார்.
ஆனால், அவரது திட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. நேற்று காலை நெல்லை பெருமாள்புரத்தில் உள்ள நயினார் நாகேந்திரன் வீட்டுக்குச் சென்ற போலீசார் அவரை வீட்டுக் காவலில் வைத்தனர். அவரது வீட்டைச் சுற்றிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு
ள்ளனர்.
இதேபோல், நெல்லை மாவட்டம் முழுவதும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்க பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்புகளைச் சேர்ந்த 480 பேரை அவரவர் வீடுகளிலேயே போலீசார் வீட்டுக் காவலில் வைத்து
ள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னை வீட்டுக் காவலில் வைத்துள்ள போலீசாரின் நடவடிக்கை
க்கு நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சுப்ரீம் கோர்ட் உத்தரவை அரசு மதித்து செயல்பட்டிருக்க வேண்டும் என்றும், தீபம் ஏற்றுவதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் நயினார் பேசும்போது, “உச்சநீதிமன்ற உத்தரவை வணங்கி ஏற்றுக்கொண்டு திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதற்கு அரசு உடனடியாக ஆணை பிறப்பித்திருக்க வேண்டும். ஆனால், பெரும்பான்மை சமுதாய மக்களின் கோரிக்கையை நிராகரித்து, தேவையில்லாத பதற்றத்தைச் சட்ட ஒழுங்குச் சூழலாக அரசு திசைதிருப்பி வருகிறது .
இன்று கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள பாஜக மாவட்டத் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை போலீஸார் வீட்டுக்காவலில் வைத்து முடக்கியிருப்பது வன்மையாகக் கண்டிக்க
த்தக்கது. நீதிமன்ற உத்தரவு
களை மதிக்காமல் காவல்துறையை ஏவி விடுவதிலேயே அரசு கவனம் செலுத்துகிறது.
அதேபோல, கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகாருக்கு
ள்ளான சட்டமன்ற உறுப்பினர் அருண் விக்னேஷ் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத ஒரு நிர்வாகத் திறமையற்ற அரசாகவே இது செயல்படுகிறது. இன்னமும் கால அவகாசம் உள்ளது.
உச்சநீதிமன்ற உத்தர
வின்படி, நேற்று மாலை மாவட்ட ஆட்சியர் தலைமையில் உரிய பாதுகாப்புடன் குறைந்த
பட்சம் 10 பேராவது சென்று தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும்.அப்படி செய்ய தவறினால், தமிழக வரலாற்றில் இந்நாள் ஒரு இருண்ட நாளாக அமையும்” என்றெல்லாம் எச்சரித்துள்ளார்.
நெல்லையில் பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்ப
ட்டுள்ள நிலையில், திருப்ப
ரங்குன்றம் மலையிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 5,600 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் மூலமாகக் கண்காணிப்பு மேற்கொள்ளப்படு
வதுடன், ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், மதுரை மாவட்டத்தில் பிஎன்எஸ்எஸ் சட்டத்தின் 163-வது பிரிவின் கீழ் நேற்று நவம்பர் 23 இரவு முதல் நவம்பர் 25 காலை வரை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அனுமதியற்ற கூட்டங்கள், பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கி
ன்றன.
உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின்படி, குறிப்பிட்ட குழுவினர் மட்டுமே தீபத்தூணுக்குச் சென்று தீபம் ஏற்றுவ
தற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும். பொதுமக்கள் அனைவரும் மலை உச்சிக்குச் செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. இதனிடையே, சுப்ரீம் கோர்ட் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி
யுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *