விஜய் ஆண்டனி நடித்த “அப்பா குட்டி” படத்தின்பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்

விஜய் ஆண்டனி ஆரம்பத்தில் இசையமைப்பாளராக திரைத்துறையில் நுழைந்தவர். பின்னர் நடிப்பதிலும் ஆர்வம் கெண்டு “சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன்” உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
‘அப்பா குட்டி’
இவர் தற்போது இயக்குநர் மு.மாறன் இயக்கத்தில் நாயகனாக நடித்துள்ள புதிய படம் ‘அப்பா குட்டி’. விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படம், தந்தை மற்றும் மகள் இடையேயான உறவை மையமாகக் கொண்டு உருவானதாகத் தெரியவருகிறது. தெலுங்கு மொழியில் ‘நாநா குட்டி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் நடிகர்கள் பிரீத்தி அஸ்ரானி, பகவதி பெருமாள், ஜென்ஸன் திவாகர், அருவி மதன், ஹரிபிரியா, லிஸ்ஸி ஆண்டனி உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கதாநாயகனாக நடிக்கும் விஜய் ஆண்டனியே இப்படத்துக்கு இசையமைப்பாளராகவும் உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *