லஞ்ச, ஊழல் வழக்குகளை விரைவாக முடிக்கபுதிய கூடுதல் நீதிமன்றங்களை அமைக்க வேண்டும்ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை, நவ.15-
நிலுவையில் உள்ள லஞ்ச, ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்க கூடுதல் மாவட்ட நீதிமன்றங்களை, சிறப்பு நீதிமன்றங்களாக அறிவிப்பது குறித்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியை சேர்ந்த, குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளராக இருந்த சாகுல் ஹமீது, தூத்துக்குடி முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் 3 ஆண்டாக நடந்து வரும் தன் மீதான லஞ்ச வழக்கை விரைந்து முடிக்க கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில், மாநிலத்தில் உள்ள 2,423 ஊழல் வழக்குகளையும் கூடுதல் சுமையாக ஒப்படை
த்தால், சட்டப்படி 2 ஆண்டு
களில் விசாரணையை முடிக்க வேண்டும் என்ற நோக்கம் சிதைந்துவிடும்.
ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 3ன் கீழ், கூடுதல் அமர்வு நீதிபதிகளையும், சிறப்பு நீதிபதிகளாக நியமிக்க இடமுள்ளது. எனவே பிரத்யேக சிறப்பு நீதிமன்றங்கள் இல்லாத 30 மாவட்டங்களில் தேவைப்படும் இடங்களில் புதிய பிரத்யேக சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பது குறித்தும், கூடுதல் அமர்வு நீதிமன்றங்களையும் சிறப்பு நீதிமன்றங்களாக அறிவிப்பது குறித்தும் தமிழக அரசு, உயர்நீதிமன்றத்துடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கின் விசாரணையை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
பெண்களுக்கான திறந்தவெளி சிறை எப்போது திறக்கப்படும்?
மதுரையை சேர்ந்த ராஜா, கடந்த 2022ம் ஆண்டு ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘’தென் மாவட்டத்தில் பெண்களுக்கான திறந்தவெளி சிறைச்சாலையை உடனடியாக அமைக்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி பி.வேல்முருகன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் பெண் கைதிகளுக்கான திறந்தவெளி சிறைச்சாலை ஏன் இன்னும் திறக்கப்படவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், எப்போது தொடங்கப்படும் என்பது குறித்து தமிழ்நாடு அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *