மதுரை, அக். 20-
மதுரை யாதவர் (இருபாலர்) கல்லூரியில் இளைஞர் விளையாட்டு (ம) கலாச்சார மேம்பாட்டுச் சங்கம் மற்றும் YSCDS BOOK OF WORLD RECORDS இணைந்து நடத்திய போதையை விடு சிலம்பத்தை கையில் ஏடு என்ற தலைப்பில் உலக சாதனை நிகழ்வு மற்றும் கலைத்தாய் விருது வழங்கும் வழங்கும் விழாவை ஸ்டார் அறக்கட்டளையின் நிறுவனர் ஸ்டார் குரு அவர்கள் தலைமையேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார், இச்சாதனை நிகழ்வில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல சிலம்பம் அகடமி சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் ஒரு மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி உலக சாதனை நிகழ்வை படைத்தார்கள், அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு கலைத்தாய் விருதையும் ஸ்டார் அறக்கட்டளையின் நிறுவனர் ஸ்டார் குருசாமி அவர்கள் வழங்கினார், இந்நிகழ்ச்சிக்கு இளைஞர் விளையாட்டு (ம) கலாச்சார மேம்பாட்டுச் சங்கத்தின் தலைவர் ராதிகா செந்திலிங்கம் வரவேற்புரை ஆற்றினார், செயலாளர் செந்திலிங்கம் விழா அறிமுகஉரை ஆற்றினார், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் – முனைவர் இளையாப்பிள்ளை, தவெக மதுரை மேற்கு ஒன்றிய செயலாளர் குஷி மார்நாடு, கிழக்கு ஒன்றிய செயலாளர் மிலிட்டரி ராமகிருஷ்ணன் ஆகியோர் உலக சாதனையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்கள், சிவகங்கை நேஷனல் பிரஸ் கிளப் தலைவர் பாண்டியராஜன், விசிக மதுரை கிழக்கு மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டி
யன் ஆகியோர் விருதா
ளர்களுக்கு கலைத்தாய் விருது வழங்கினார்கள், சங்கத்தின் பொருளாளர் முத்துப்பாண்டி நன்றியுரை ஆற்றினார், இந்நிகழ்ச்சியில் காலை உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டது இவ்உணவை ஸ்டார் அறக்கட்டளையின் நிறுவனர் ஸ்டார் குரு அவர்கள் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது,
போதையை விடு சிலம்பத்தை கையில் எடு உலக சாதனை நிகழ்வை துவங்கி வைத்தார் ஸ்டார் குருசாமி
