பெருந்துறையில் ரூ.1,100 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார்

பெருந்துறை, நவ.4-
தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் பெருந்துறைக்கு சென்றார். முன்னதாக தனி விமானம் மூலம் கோவை சென்றார். கோவையில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவை விமான நிலையத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கட்சியினர், அதிகாரிகள் வரவேற்றனர். பின்பு விமான நிலையத்தில் இருந்து ரோடு ஷோ மூலமாக ஈரோடு புறப்பட்டுச் சென்றார்.
விஜயமங்கலத்தைக் கடந்த பிறகு, சிப்காட் பகுதி வழியாக ஈரோடு சாலைக்கு வந்த முதல்வர், பெருந்துறை நகர்ப்பகுதி வழியாக விழா நடைபெறும் இடத்திற்குச் சென்றார். அரசு விழா நடைபெறும் காஞ்சிக்கோ
வில் சாலைப் பிரிவு வரை, சுமார் 7 இடங்களில் வாகனத்தில் இருந்து இறங்கி மக்களைச் சந்திக்கும் நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டி
ருந்தது. பின்பு விழா மேடையில் ரூ.1,100 கோடி மதிப்பில் மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் முதல்வா் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெற இருந்த நிலையில், காஞ்சிக்கோவில் பிரிவு அருகேயுள்ள ஸ்ரீ லட்சுமி நாராயணா திருமண மண்டபத்துக்கு தற்போது மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
இந்த விழாவில் முதல்வா் ஜோசப் விஜய் பங்கேற்று, மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடனுதவி உள்பட ரூ. 1,100 கோடியில் சுமாா் 5 ஆயிரம் பேருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார் மேலும், ஈரோடு மாவட்டத்தில் முடிவுற்ற பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளையும் அவா் தொடங்கிவைத்தார்.
விழா நடைபெறும் திருமண மண்டபத்தில் வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன், கைத்தறி துறை அமைச்சா் ம.விஜய்பாலாஜி, ஆட்சியா் ச. கந்தசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி ஆகியோா் உடனிருந்தனர்.
சட்டப் பேரவை உறுப்பினா்கள் அனந்த் மோகன் (ஈரோடு மேற்கு), சண்முகம் (மொடக்குறிச்சி, பெருந்துறை முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் ஜெயகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
இரும்புத் தடுப்புகள் அமைப்பு:
பெருந்துறை, விஜயமங்கலம் சுங்கச்சாவடி முதல் விழா நடைபெறும் இடம் வரை சாலையின் இருபுறமும் பொதுமக்கள் முதல்வரை காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.
சுங்கச் சாவடி, சிப்காட் நுழைவாயில், பெருந்துறை புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், குன்னத்தூா் நான்கு சாலை, அண்ணா சிலை வழியாக விழா நடைபெறும் மண்டபத்துக்கு முதல்வா் சென்றார். முதல்வா் வருகையையொட்டி ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *